சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் சிக்கினர்: அதிகாரிகள் அதிரடி சோதனை
2019-08-15@ 02:03:54

சென்னை: தாய்லாந்து தலைநகர் சார்ஜாவில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த சூசை அலெக்ஸாண்டார் (62), ராபர்ட் (39) என்ற இருவரும் மியான்மர் நாட்டுக்கு சென்று விட்டு தாய்லாந்து விமானத்தில் சென்னை வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். இருவரது உள்ளாடையிலும் 210 கிராம் தங்க கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு 8.3 லட்சம். மேலும், இவர்கள் உடைமைகளை சோதனை செய்தபோது வெளிநாட்டு மதுபானங்கள் 20 பாட்டில்கள் இருந்தன. மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் 20 பண்டல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட் பண்டல்கள் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ரியார்த்தில் இருந்து சார்ஜா வழியாக ஏர் அரேபியன் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ஐதராபாத்தை சேர்ந்த நஷீர் பாபா (54) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சார்ஜா சென்றுவிட்டு சென்னை வந்தார். அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. வெளிநாட்டிலிருந்து அவர் எமர்ஜென்ஸி விளக்கு ஒன்று வாங்கி வந்தார். அதை சுங்க அதிகாரிகள் கழற்றிப் பார்த்தனர். அதில் இரண்டு தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தார். அதன் மொத்த எடை 235 கிராம். இதன் சர்வதேச மதிப்பு 80 லட்சம். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்திய அதிரடி சோதனையில் தங்கம், சிகரெட்கள், மதுபானம் கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை
பாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி
துணிக்கடையில் 9 லட்சம் கொள்ளை
போலி ஆதார் கார்டு தயாரித்து 1 கோடி நிலம் அபகரித்தவர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரிடம் 10 லட்சம், 5 சவரன் அபேஸ்: மோசடி பெண் மீது போலீசில் புகார்
குற்றப்பிரிவு காவலர்கள் என்று கூறி கேரள வாலிபரிடம் 1.5 லட்சம் அபேஸ்
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது