SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியாக உயர்வு: நீர்வரத்து 48,000 கனஅடியாக சரிந்தது

2019-08-15@ 01:51:41

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை  காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, கடந்த திங்கட்கிழமை மாலை, விநாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியானது. அணையின் நீர்மட்டம் 103 கனஅடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து, 86வது ஆண்டாக மேட்டூரிலிருந்து டெல்டா  பாசனத்திற்கு, நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். தொடக்கத்தில் விநாடிக்கு 3000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, நேற்று காலை 50 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி 48 ஆயிரம் கனஅடியாகவும் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடியும், கிழக்கு  மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடியும், தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 107.75 அடியாக  இருந்த நீர்மட்டம், இரவில் 109 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 76.88 டி.எம்.சியாக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு  60 ஆயிரம் கனஅடி: கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்து  சாரலாக மாறியுள்ளதால், கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை, அம்மாநில அரசு குறைத்துள்ளது. இதன் எதிரொலியாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 1,90,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக  சரிந்து இரவு 8 மணிக்கு 80,000 கனஅடியானது.

நேற்று காலை 8மணி நிலவரப்படி 40,000 கனஅடியாக சரிந்த நிலையில் மீண்டும் மாலை 3 மணி நிலவரப்படி, 60,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளம் பாய்ந்தோடி வருவதால் தொடர்ந்து பரிசல்  இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து அதிகளவில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூருக்கு வந்தது. இதனால் கிடுகிடுவென உயர்ந்து மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. இதையடுத்து மேட்டூர் அணை கடந்த 13ம் தேதி திறக்கப்பட்டது.  இந்த தண்ணீர் கல்லணைக்கு இன்று இரவு அல்லது நாளை (16ம் தேதி) அதிகாலை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நாளை (16ம் தேதி) தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டம் கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான மதகுகளை சரி செய்யும் பணி நடக்கிறது. மேலும் மதகுகளுக்கு வர்ணம்  பூசப்பட்டது. இதைதொடர்ந்து கல்லணையில் உள்ள கரிகாலசோழன் சிலை, அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, ராஜராஜன் சிலை, ஆஞ்சநேயர் கோயில், விநாயகர் கோயில், கருப்பண்ணசுவாமி கோயில் ஆகியவற்றுக்கும் வர்ணம்  பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்