SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்...!

2013-06-08@ 01:54:42

மும்பை: உணவு பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கவில்லை என்றும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.  உணவு தானியங்களுக்கு அதிக அளவில் மானியம் அளிப்பது உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும், விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டத்தை மழைக்கால கூட்டத் தொடரில் எப்படியாவது நிறைவேற்றவும், எதிர்கட்சிகள் ஒத்துழைக்காவிட்டால் அவசர சட்டம் மூலம் நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு மசோதா குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மும்பையில் நேற்று அளித்த பேட்டி:உணவு பாதுகாப்பு மசோதா குறித்து, நாட்டின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற விரும்புகிறேன். அவசர சட்டம் மூலம் நிறைவேற்றினாலும் நான் எதிர்க்க மாட்டேன். எதிர்கட்சிகளும் உணவு பாதுகாப்பு மசோதா வுக்கு எதிராக இல்லை. அவர்களும் விவாதித்து நிறைவேற்றவே விரும்புகின்றனர். அவசர சட்டம் மூலம் மசோதாவை நிறைவேற்றினால், இது குறித்து ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும்.உணவு பாதுகாப்பை தொடர்ந்து அளிக்க, விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். வேளாண்துறையில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். விவசாய நிலங்களுக்கு போதிய அளவில் மின்சாரம் மற்றும் உரம் கிடைக்க வேண்டும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
sms spy app phone monitoring software spy apps free
why do husbands have affairs women cheat on men wife affair
i want to cheat on my husband link my husband cheated on me blog


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்