SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கி சந்திரயான்-2 பயணம்

2019-08-15@ 01:31:50

* ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவியது.
* பூமியில் இருந்து  புறப்பட்ட 16 நிமிடம் 24 விநாடிகளில் சந்திரயான்-2 விண்கலம் புவி  சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலை நிறுத்தப்பட்டது.
* நேற்று அதிகாலை 2.21 மணிக்கு திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிலவை நோக்கி சென்றது. 1,203 வினாடிகளுக்கு  சவாலான இப்பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

சென்னை: புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி சந்திரயான்-2 தனது பயணத்தை தொடங்கியது. சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2  விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து புறப்பட்ட 16 நிமிடம் 24 விநாடிகளில் சந்திரயான்-2 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து,  விண்கலத்தை திட்டமிட்ட உயரத்திற்கு மேல் உயர்த்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்கான பணிகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து,  கடந்த 24ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. பின்னர், 26ம் தேதி 2வது முறையாகவும், 29ம் தேதி 3 வது முறையும், கடந்த 2ம் தேதி 4வது முறையாகவும் சுற்றுவட்டப்பாதை  உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 4வது நிலையில் சுற்றிவந்த சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் எல்.ஐ.4 என்ற அதிநவீன கேமரா மூலம் புவியின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியது. இந்தநிலையில், கடந்த 6ம் தேதி 5வது  முறையாக விண்கலத்தின் புவிசுற்றுவட்டப்பாதை திட்டமிட்டப்படி மேல் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்க தொடங்கியது. நேற்று அதிகாலை 2.21 மணிக்கு திட்டமிட்டதற்கு  முன்கூட்டியே நிலவை நோக்கி சென்றது. 1,203 வினாடிகளுக்கு சவாலான இப்பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.சந்திரயான்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் மொத்தம் 3,850  கிலோ எடை கொண்டது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இந்த விண்கலம் ஏற்கனவே 5 மாற்றங்களை இதுவரை கண்டுள்ளது.  நிலவின் சுற்றுவட்டப் பாதையை வரும் 20ம் தேதி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து  செட்பம்பர் 2ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழையும். இதையடுத்து பின்னர் செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கும். லேண்டரில் உள்ள ரோவர் நிலவில் மெதுவாக நிலவின் மேற்பரப்பில் இறங்கி, 500 மீட்டர்  தூரம் வரை சென்று ஆய்வு செய்யும் பணியை தொடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்