SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

2019-08-15@ 00:16:37

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.எடப்பாடி பழனிசாமி (முதல்வர்): இந்திய திருநாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம். மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள்  நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): சுதந்திரத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் பேணிக்காத்திட ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும். சுதந்திரம் பெற்றுத்தந்த தியாக தலைவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் காட்டிய  நல்வழிப்படி நாட்டை காக்க இந்த 73வது சுதந்திர திருநாளன்று நாம் அனைவரும் சபதம் ஏற்போம். ராமதாஸ் (பாமக நிறுவனர்): இந்தியாவில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை ஒழிக்கவும், அமைதி, வளம், செழிப்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவற்றை பெருக்கவும் இந்தியாவின் 73வது விடுதலை நாளில் நாம்  அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழிசை (பாஜ):  நாட்டு சுதந்திரமும், பொருளாதார சுதந்திரம் பெற்று, அதே நேரத்தில் வறுமையில்லாமல் வாழ்வதற்கு வகை செய்யும் சுதந்திர தினமாக இந்த சுதந்திரம் அமையட்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): எல்லோருக்கும், எல்லா வாய்ப்புகளும் கிடைக்கிற இந்தியாவை, பணத்தைப் பார்க்காமல் மக்களின் தேவையைப் பார்த்து ஒருசேர முன்னேறுகிற இந்தியாவை, உண்மையும், அறிவும், அன்பும்  சுடர்விடும் இந்தியாவை உருவாக்க இந்த சுதந்திர நன்னாளில் சபதமேற்போம்.ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): மத்திய மாநில அரசுகள் தேசத்தைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.விஜயகாந்த் (தேமுதிக): இந்தியா வல்லரசு நாடாக ஆவதற்கு சாதி, மதம், இன பாகுபாடின்றி, ஒற்றுமையும், அமைதியும், முன்னேற்றமும் ஏற்படவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர தினநாள் வழிவகுக்கக்கட்டும்.அன்புமணி (பாமக இளைஞரணி தலைவர்): மதுவை ஒழித்து, மனித நேயத்தை வளர்த்தெடுக்கும் நாள்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை நாள். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்காக கடுமையாக உழைக்கவும்  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்தியாவின் விடுதலை நாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): சுதந்திரப் போரில் முதல் அடி எடுத்து வைத்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்தது நாம் தமிழ்நாடு என்ற உணர்வோடு, நம்முடைய உரிமைகளைக் காத்து நின்று தமிழனாக இந்தியனாக  தலைநிமிர்ந்து வாழ்ந்திட விடுதலைத் திருநாளில் உறுதியேற்போம்.இதைபோன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கோகுலம்  மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனத் தலைவர் சேதுராமன், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஹைதர் அலி,  மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா உள்ளிட்டோர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

 • 13-12-2019

  13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • erimalai_11

  தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

 • china_isaai1

  150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

 • german_paanddaa1

  ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்