SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2019-08-15@ 00:16:30

* வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் சுனில் சுப்பிரமணியம், அங்கு அரசு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் உடனடியாக  நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2018 டிசம்பரில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியின்போதும், சுனில் மீது இதே போன்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
* பாகிஸ்தான் யு19 கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் விண்ணப்பித்துள்ளார்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்கள் உலக சீரீஸ் டி20 போட்டித் தொடரின் பைனலில் இங்கிலாந்து அணியுடன் மோதிய இந்தியா அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
* உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட நட்சத்திர வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிஸ்) தகுதி பெற்றுள்ளனர். 2வது சுற்றில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர்  செட்களில் அமெரிக்காவின் சாம் குவெரியை வீழ்த்தினார். பெடரர் தனது 2வது சுற்றில் ஜுவன் இக்னேசியோ லாண்டெரோவை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்ட நேர்காணல் நாளை நடைபெறுகிறது. கபில்தேவ் தலைமையிலான குழுவினர் பயிற்சியாளரை தேர்வு செய்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்