SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அத்திவரதர் தரிசனம் நாளை கடைசி: நள்ளிரவில் ரஜினி வந்தார்

2019-08-15@ 00:16:24

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி, வரும் 17ம் தேதிவரை நடக்கிறது. நாளை வரை மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க முடியும். கடந்த 41  நாட்களில் 80  லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். கட்டுக்கடங்காத பக்தர்கள் வருகையால் அத்திவரதர் தரிசனம் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்தது. நாளையுடன் மக்கள் தரிசனம் முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக  செய்யப்படுகின்றன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.40 மணியளவில் திடீரென வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு சென்றார். அவருடன் மனைவி லதா மற்றும் குடும்பத்தினர் வந்தனர். மேற்கு கோபுரம் பகுதிக்கு  வந்த நடிகர் ரஜினிகாந்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அத்திவரதருக்கு ரஜினிகாந்த் சார்பில் செந்தூரப்பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து நள்ளிரவு 1 மணியளவில்  ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார்.

இன்று பகல் 12 மணியுடன்விஐபி தரிசனம் முடிவு
வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி கருடன் உற்சவத்தை முன்னிட்டு மாலை 5 மணியுடன் அனைத்து தரிசனமும் முடிவடைகிறது. இதற்காக பகல் 12 மணி அளவில் கிழக்கு கோபுர வாயில் நடை அடைக்கப்பட்டு கோயிலின் உள்ளே  வந்தவர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஐபி தரிசனமும் இன்றுடன் முடிவடைகிறது.

தரிசனத்துக்கு வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
அத்திவரதர் வைபவத்தில் நேற்று காலை தரிசனம் செய்ய நெமிலி பானாவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமார், அவரது மனைவி விமலா (25) ஆகியோர் வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான விமலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.  உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை கோயில் வளாகத்தின் 16 கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ உதவி முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு விமலாவுக்கு 3 கிலோ எடையில் அழகான ஆண்குழந்தை சுகப்பிரசவத்தில்  பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து, அசோக்குமார் கூறுகையில், என் மனைவி விமலா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் அத்திவரதரை பார்க்க வேண்டும் என ஆர்வமாக இருந்தார். மருத்துவர்கள் 27ம் தேதி பிரசவம் ஆகும் என கூறியிருந்தனர். இதனால்,  அவருடன் நேற்று காலை கோயிலுக்கு வந்தேன். சிறப்பு அனுமதி பெற்று தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்தபோது, திடீரென பிரசவ வலியால் விமலா துடித்தார். உடனடியாக மருத்துவ உதவி மையத்துக்கு அழைத்துச் சென்றதில்  அழகான ஆண்குழந்தை பிறந்தது. அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு கோயிலிலேயே ஆண்குழந்தை பிறந்ததால் அத்திவரதன் என பெயர்வைக்க தீர்மானித்துள்ளோம் என்றார். முன்னாள் பிரதமர் வருகைமுன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி நேற்று மதியம் 2 மணியளவில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு 2.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்