SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 154 கோடியில் 500 புதிய பேருந்துகள்: முதல்வர் துவக்கி வைத்தார்

2019-08-15@ 00:16:23

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.154 கோடியில் 500 புதிய பேருந்துகளை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 235 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 118 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 18  பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 60 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 16 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 25 பேருந்துகளும், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு  போக்குவரத்துக் கழகங்களுக்கு தலா 14 பேருந்துகளும் என மொத்தம் 154 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 500 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின்  பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகர  போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்