போக்குவரத்து விதிகளை மீறுபவருக்கு புதிய அபராதம்: சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்...போக்குவரத்து போலீஸ் அறிக்கை
2019-08-14@ 21:36:10

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் விதிக்கப்படும் அபராதம் பற்றி போக்குவரத்து போலீஸ் அறிக்கை அறித்துள்ளது. அதில், இருசக்கர வாகனத்தில் அதிக நபர்கள் சென்றால் ரூ.2000 அபராதம், 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் தகுதியிழப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும், ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம், 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் தகுதியிழப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் அவரச சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10,000 அபராதம், 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் வாகன உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சாலைகளில் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம், ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ.500இல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமத்தை தகுதியிழப்பு செய்த பின்னரும் வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000 அபராதம், போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூ.100 லிருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலசுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஐஐடி மாணவி தற்கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு : மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழஙகவும் ஐஐடிக்கு அறிவுரை
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான பேரணி: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உள்பட ஏரளாமானோர் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் தினகரன் நாளிதழின், ‘மாபெரும் உணவுத் திருவிழா’ தொடங்கியது
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் : 4 மாவட்டங்களில் போலீஸ் ரகசிய விசாரணை
பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது