SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் விடுமுறை எதிரொலி: களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2019-08-14@ 19:35:24

களக்காடு: தொடர் விடுமுறை எதிரொலியால் களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி ஓடுவதாலும், அதில் குளுமை அதிகம் என்பதாலும் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினமும் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோடை வெயிலால் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த 3 மாதங்களாக தலையணை தண்ணீர் இன்றி வறண்டு கிடந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்தது. இதன் விளைவாக தலையணையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. தற்போது தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறை என்பதால் தலையணைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றுள்ளனர். நேற்றும் விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட தலையணையில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் அங்குள்ள சிறுவர் பூங்காவில் ஆனந்தத்துடன் விளையாடினர். அருங்காட்சியகத்தில் உள்ள மீன்களையும் ஆர்வமுடன் பார்வையிட்ட
னர். இதையொட்டி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வனசரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளியூர்களில் இருந்து வருவோர், களக்காட்டில் இருந்து ஆட்டோ அல்லது வாகனங்கள் பிடித்து செல்ல வேண்டியதுள்ளது. எனவே களக்காட்டில் இருந்து தலையணைக்கு விடுமுறை நாட்களில் அரசு பஸ்கள் இயக்கினால் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்