SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வியாபாரிகள் வரத்து குறைவால் பாவூர்சத்திரத்தில் பாகற்காய் விலை கடும் சரிவு

2019-08-14@ 19:34:37

பாவூர்சத்திரம்: கேரளாவில் தொடர் மழையால் வியாபாரிகள் வருகை குறைந்ததால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பாகற்காய் விலை சரிந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் ஒன்றியப் பகுதிகளான கீழப்பாவூர், பாவூசத்திரம், அருணாப்பேரி, பட்டமுடையார்புரம், கழுநீர்குளம், நாகல்குளம், ஆவுடையானூர், குறும்பலாப்பேரி, சாலைப்புதூர், அடைக்கலப்பட்டினம், கல்லூரணி, அரியப்புரம், மேலப்பாவூர், அத்தியூத்து, கல்லூத்து, முத்துகிருஷ்ணப்பேரி, கரும்பனூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாகற்காய் பயிரிடப்பட்டு உள்ளது.

தற்போது விவசாயிகள், பாகற்காய் மகசூல் எடுத்து பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மருத்துவ குணம் கொண்டுள்ள பாகற்காய், கேரள மக்களின் விருப்ப உணவாகும். பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் 1 டன்னுக்கும் குறைவாகவே பாகற்காய் விற்பனைக்கு வந்ததால் வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்தனர். இதனால் கிலோ ரூ.25 முதல் 35 வரை விற்பனையானது.
ஆனால் கடந்த இரு நாட்களாக மார்க்கெட்டிற்கு தினமும் 2 டன்னுக்கு அதிகமாக பாகற்காய் விற்பனைக்கு வந்து குவிகிறது. வரத்து அதிகம் மற்றும் கேரளாவில் மழை வெள்ளத்தால் அங்கிருந்து காய்கறி மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் பாகற்காய் விலையில் சரிவு காணப்பட்டு கிலோ ரூ.10 முதல் ரூ.18 வரை விற்பனையானது. இதனால் கவலையடைந்துள்ள பாகற்காய் பயிரிட்ட விவசாயிகள், விலையில்லாததால் காய்களை பறிப்பதற்கு கூலி கூட கொடுக்க முடியாததால் கொடியிலேயே பறிக்காமல் விட்டுள்ளனர். இதன் காரணமாக பாகற்காய்கள் பழுக்க துவங்கியுள்ளன


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்