நீலகிரி வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டும் ‘515 கணேசன்’
2019-08-14@ 19:33:45

புதுக்கோட்டை: நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆலங்குடியை சேர்ந்த சமூக சேவகர் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் ‘515 கணேசன்’ (68). சமூக சேவகரான இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக கட்டணம் வசூலிக்காமல் 6 ஆயிரம் சடலங்களை ஏற்றிச் சென்றுள்ளார். 515 கணேசன் என்றால் தமிழகத்தில் அனைத்து சமூக அமைப்புகளுக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டோர், கடலூரில் தானே புயலில் பாதிக்கப்பட்டோர், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து எடுத்து சென்று வழங்கியுள்ளார்.
தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக ஒலி பெருக்கியுடன் கூடிய தனது 515 அம்பாஸிடர் காரில் கடைகள், குடியிருப்புகளுக்கு சென்று பணம், பொருள்கள் சேகரித்து வருகிறார். இவருடைய சேவையைப் பாராட்டி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளது.
மேலும் செய்திகள்
வாணியம்பாடியில் ஒருதலைக்காதலால் விபரீதம் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர்
திண்டுக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி முன் காங்கிரசார் கோஷ்டி மோதல்: பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை
நகர்ப்புற சுகாதார மையங்களில் இரவு பணியில் டாக்டர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா?: அரசு விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு
அமைச்சர் காமராஜ் தகவல் துருக்கியில் இருந்து 500 டன் வெங்காயம் இறக்குமதி
கணவன், மனைவி தகராறில் பயங்கரம் 10 மாத பெண் குழந்தையை குப்பையில் வீசிய தாய்
சான்றிதழுக்கு 500 லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது