SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் வெள்ளப்பெருக்கு சுருளி அருவியில் குளிக்க தடை

2019-08-14@ 19:28:57

கம்பம்: சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாகவும், புண்ணிய தலமாகவும் இந்த அருவி விளங்குகிறது. இந்த அருவிக்கு தூவாணம் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும், மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழை நீரும் வந்து சேர்கிறது. தூவாணம் அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், கடந்த சில மாதங்களாக அருவிக்கு நீர் வராததால் வறண்டு கிடந்தது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த 8ம் தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். நேற்று அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை காரணமாக அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2019

    11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jnu_studentss1

    குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

  • bushfire_aussiee1

    ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

  • asutra_bushfirr1

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

  • parani_deepam11

    கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்