SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்த மாதம் ஆவணி திருவிழா தேரோட்டம் கோட்டார் ஏழகரம் கோயில் ரத வீதிகள் சிதலமடைந்து கிடக்கும் அவலம்: பக்தர்கள் கொந்தளிப்பு

2019-08-14@ 19:28:03

நாகர்கோவில்: கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் ரத வீதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில் கோட்டார் ஏழகரத்தில் பிரசித்தி பெற்ற பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செப்டம்பர் 2ம் தேதி ஆவணி திருவிழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில், செப்டம்பர் 10ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. கோயிலை சுற்றி உள்ள 4 ரத வீதிகளிலும் தேர் வலம் வரும். ஆனால் தற்போது பாதாள சாக்கடை பணி மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிக்காக இந்த பகுதியில் குழாய்கள் பதிக்க குழி தோண்டப்பட்டது. அதன் பின்னர் சாலை சீரமைக்கப்பட வில்லை. ஏற்கனவே 4 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில் குழாய்கள் பதிக்க அடுத்தடுத்து தோண்டியதால் சாலை மேலும் மோசமானது. ஆவணி திருவிழாவுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. இந்த நிலையில் சாலைகள் மோசமாக கிடப்பது பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது.

தேரோட்டத்துக்கு வசதியாக ரத வீதிகளை சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முன்னாள் கவுன்சிலர் செல்வம் கூறுகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு திருவிழாவின் போது பாதாள சாக்கடைக்காக சாலையில் குழாய் பதிக்க தோண்டி இருந்தனர். அப்போது சாைலயை சீரமைத்து தர வேண்டும் என இப்போது இருக்கும் ஆணையரை சந்தித்து தான் வலியுறுத்தினோம். ஆனால் கண்டு கொள்ளப்பட வில்லை. மிகுந்த சிரமத்துக்கு இடையே தான் தேரோட்டம் நடந்தது. இந்த நிலையில் தற்போது புத்தன் அணை திட்டத்துக்காக சாலையை மீண்டும் தோண்டி உள்ளனர். இதனால் சாலை மேலும் மோசமாகி உள்ளது. பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. பலமுறை மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. இந்த முறை திருவிழாவுக்கு நாட்கள் நெருங்கி கொண்டு இருக்கிறது. எனவே விரைவில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இது பற்றி மாநகராட்சி ஆணையரை சந்திக்க உள்ளோம் என்றார். இது தொடர்பாக பக்தர்கள் கூறுகையில், போர்க்கால அடிப்படையில் ரத வீதிகளை சீரமைத்து தர வேண்டும். இல்லையென்றால், இந்த மாத இறுதி வாரத்தில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gujarath_111

    குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • srilankaa_twinnss1

    இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்