தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரி குப்பைக்குள் அமர்ந்து மக்கள் போராட்டம்
2019-08-14@ 19:27:02

திருப்பூர்: திருப்பூர் எஸ்.வி. காலனியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றாததால், அவற்றை அகற்றகோரி அந்த பகுதி மக்கள் இன்று குப்பைக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு எஸ்.வி. காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பள்ளிகள் வழிபாட்டுத்தலங்கள், பனியன் நிறுவனங்கள் உள்ளது. இங்கு பனியன் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேகரம் ஆகக்கூடிய குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி சார்பில் ஆட்கள் வருவதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொது குப்பை தொட்டியில் தங்களது குப்பைகளை போட்டு வருகின்றனர். அவை நிறைந்து ரோட்டில் சிதறி வருகிறது. அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி வாகனம் ஒரு மாதங்களுக்கு மேலாக வரவில்லை. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து இந்த பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை மக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கார்மேகம் தலைமையில் குப்பைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்துவதாக உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நூதன போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
வாணியம்பாடியில் ஒருதலைக்காதலால் விபரீதம் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர்
திண்டுக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி முன் காங்கிரசார் கோஷ்டி மோதல்: பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை
நகர்ப்புற சுகாதார மையங்களில் இரவு பணியில் டாக்டர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா?: அரசு விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு
அமைச்சர் காமராஜ் தகவல் துருக்கியில் இருந்து 500 டன் வெங்காயம் இறக்குமதி
கணவன், மனைவி தகராறில் பயங்கரம் 10 மாத பெண் குழந்தையை குப்பையில் வீசிய தாய்
சான்றிதழுக்கு 500 லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது