SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது

2019-08-14@ 16:07:47

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞனும் இளம்பெண்ணும் சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்யப்பட்டனர். செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஒரு கல்லூரி மாணவி சம்மந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12-ம் தேதி  தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜி.என். சிட்டி சாலையில் பிரசன்னா,லிப்சா என்ற 2 பெண்கள் நடந்து செல்கின்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞனும் அவருடன் வந்த இளம்பெண்ணும், நடந்து சென்றுக்கொண்டிருந்த அந்த பெண்ணிடம் இருந்த வாகனத்தை ஓட்டிக்கொண்டே லாபகமாக அந்த பெண்ணுடைய செல்போனை பறித்து சென்றனர்.

அப்போது அந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இதை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் புகாரின் அடிப்படையில், அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, அந்த இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தது போலீசாருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஒரு பெண்ணும் ஈடுபட்டிருப்பது அரிதான ஒன்றாகும். இதையடுத்து இந்த இருவரையும் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகன எண்னை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த அடிப்படையில் இரண்டு போரையும் போலீசார் கைது செய்தனர்.

அதில் ராஜு (29) என்கின்ற சூளைமேடு பகுதியில் வசிப்பவர். ஏற்கனவே இவர் மீது வடபழனி காவல் நிலையத்தில் பைக் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் பின்னால் அமர்ந்திருந்த ஸ்வாதி(20) என்ற கரூரை சேர்ந்தவர், இவர் தாம்பரத்தில் உள்ள  பாரதியார் பல்கலைக்கழகத்தில் விஸ்காம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு வருவது தெரிய வந்தது, ஒரு கல்லூரி மாணவி செல்போன் பறிப்பில் சம்மந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியான தகவலாகும். மேலும் இருவரையும் கைது செய்து வழக்கு வாழைக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புகழ் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்