சென்னை தலைமை செயலகத்தில் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!
2019-08-14@ 11:45:49

சென்னை : சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவை. போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னை 235, விரைவு போக்குவரத்து கழகம் - 118, விழுப்புரம் -18, சேலம் - 60, கோவை - 16, கும்பகோணம் - 25, மதுரை - 14, நெல்லை - 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்தின் இருபுறமும் அவசர கால வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக தனித்தனி இருக்கைகள் மற்றும் பயணிகள் நின்று பயணிக்க ஏதுவாக அகலமான பாதைகள் உள்ளன. பயணிகள் இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதிகள்; பயணிகள் வழித்தடத்தினை எளிதில் அறிந்து கொள்ள மின்னணு வழித்தட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு விரைவு பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கை மற்றும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விதிமீறல் ஆட்டோக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் புகார்: நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் 20ம் தேதி முதல் செயல்படும்: 17 சாலைகளில் 5532 வாகனங்கள் நிறுத்தலாம்
உடைந்த பைப்லைனை சீரமைப்பதில் மெத்தனம் சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீர்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி: எம்டிசி மேலாண் இயக்குனர் தகவல்
விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அதிநவீன செயற்கை கால்: ராஜிவ்காந்தி மருத்துவமனை சாதனை
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது