SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.408 குறைவு

2019-08-14@ 11:03:51

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3576-க்கும், சவரன் ரூ.28,608-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.60 குறைந்து ரூ.47.40-க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 34 டாலர் குறைந்து 1498 டாலராக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 3.627-க்கும், சவரன் ரூ.29,016-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் ஒரே வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 67 டாலர் அதிகரித்து 1529 டாலராக உயர்ந்தது. மேலும் இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்திருந்தது. மேலும் ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை 29 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் இன்று சவரகனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam 9 fest

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.

  • 10-12-2019

    10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hongkiong_1211

    அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • northesat_masothaa1

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

  • dragon_shapes_chinaa1

    40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்