SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் கனமழை காரணமாக கடந்த 3 தினங்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

2019-08-14@ 10:34:03

நீலகிரி: நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. தொடர் கனமழை காரணமாக கடந்த 3 தினங்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் புதன்கிழமையாகிய இன்று தொடங்கியது. அழகிய மலைகள், அடர்ந்த வனங்கள், தேயிலைத் தோட்டங்கள், அருவிகள் நிறைந்த நீலகிரி மலை ரயில் பயணமானது மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சுமார் 60 கி.மீ. தூரம் கொண்டதாக உள்ளது. 108 வளைவுகள், 250 பாலங்கள், 16 குகைகள் கொண்ட மலை ரயில் பாதையில் 150 ஆண்டு காலமாக இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மட்டுமே நீராவி என்ஜினால் இயக்கப்படுகிறது. உதகைக்கு பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படுகிறது. இங்கே தான் ஆசியாவிலேயே 19 கி.மீ. தொலைவுக்கு பல் சக்கரப் பாதையில் மலை ரயில் செல்கிறது. மலை ரயிலில் 37384 என்ற எண் கொண்ட எக்ஸ் கிளாஸ் என்ஜின் கொண்ட ரயில் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவி என்ஜினாக நூற்றாண்டுகளைக் கடந்தும் இயஙகி கொண்டிருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதோடு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகை - குன்னூர் இடையே காலை 9 மணிக்கு சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்ததை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்குச் செல்லும் மலை ரயில் 3 நாட்களுக்கு (ஆக 11,12,13) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நீலகிரிக்கு சிறப்புச் சேர்க்கும் மலை ரயிலின் சேவை கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமையாகிய இன்று நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்