SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

2019-08-14@ 10:17:31

தருமபுரி: ஒகேனக்கலில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கலில் உள்ள பாறைகள் முழுவதும் முழ்கடிக்கப்பட்டு வெள்ளம் பெருக்கடித்து ஓடியது.

இதில் சுற்றுலா பயணிகளுக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக பெண்கள் குளிக்கின்ற அருவியில் தடுப்பு சுவர்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு கம்பிகள் வருகின்ற சுற்றுலா பயணிகள் ஐந்தருவியின் அழகை கண்டு ரசிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த  கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான பாதுகாப்பு அம்சங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

தற்போது மழைவெள்ளம் அதிகரித்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளுக்கு இங்கே அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல் இங்கு சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் 2 மாதகாலம் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றால் இவர்களின் வருவாய் முற்றிலுமாய் கேள்விக்குறியாகி விடும்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உடனடியாக சேதமடைந்த இந்த பாதுகாப்பு அம்சங்களை சீர்செய்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளும் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்