SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது: டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறப்பு..!

2019-08-14@ 09:42:16

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும், மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் 2012 முதல் தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை மூலம், 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப் படவில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை விநாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 103 கனஅடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 69.85 டிஎம்சியாக இருந்தது. இதையடுத்து, 86வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு தாமதமாக நேற்று காலை திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையின் வலது கரையின் மின்விசை மூலம் அணையின் மேல் மட்ட மதகுகளை உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

தொடக்கத்தில் விநாடிக்கு 3000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக நேற்று மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாகவும், நீர் இருப்பு 75.25 டிஎம்சியாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2019

    17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-11-2019

    16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jet15

    1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

  • amgun

    அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

  • zimbabwe_elephant111

    ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்