SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் பார் டெண்டர் திடீரென தள்ளிப்போன ரகசியத்தை உடைக்கிறார்: wiki யானந்தா

2019-08-14@ 00:29:26

மழை துவங்கியாச்சு... பலர் வங்கி கணக்கில் பேலன்ஸ் எகிறியாச்சாமே, உண்மையா... என்றார் பீட்டர் மாமா.‘‘சிவகங்கையில குடிமராமத்து பணி ரூ.80 கோடியில் நடந்து வருகிறதாம். ஆனால் இதில் விதிகளை மீறி போலி சங்கம் அமைத்து, கான்ட்ராக்டர்கள் மூலம் பணிகளை செய்றாங்க. இதன்மூலம் பல கோடி ரூபாயை இலை ஆட்கள் கமிஷனாக  சுருட்டுறாங்களாம்... நீண்ட காலத்திற்கு பிறகு கண்மாய், குளங்கள், கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடக்கப்போகிறது என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறதாம். இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்காமல்  மாவட்ட நிர்வாகமும் மேலிடத்துக்கு கட்டுப்பட்டுள்ளதால் அவர்களால் வழக்கம்போல வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறதாம்...’’ என்று வேதனையுடன் தெரிவித்தார் விக்கியானந்தா.‘‘அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கையை இலை கட்சி தந்திரமாக குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ மாணவர்கள் இல்லாத பள்ளியை நூலகமாக மாற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும்... அதன் உண்மையான நோக்கம் நூலகம் மூலம் வாசகர் வட்டத்தை உருவாக்குவது இல்லையாம். அரசின் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஆசிரியர்களின்  சம்பளம், ஓய்வூதியமாக போய்விடுகிறதாம். இதனால் வருவாய் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து பட்ஜெட்டில் கடன் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே போகிறதாம். அதனால் பள்ளிகளை மூடிவிட்டு அதற்கு பதில் நூலகம்  திறந்தால் சத்துணவு செலவு மிச்சம், ஆசிரியர்களின் சம்பளம் மிச்சம், ஆசிரியரல்லாத பணியாளர் சம்பளம் மிச்சம் என்று மிச்சமாகிறதாம். இதன் மூலம் ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தர வேண்டிய அவசியம் இல்லை. காலி  பணியிட எண்ணிக்ைகயும் உயராது. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருப்பார்கள். இருக்கும் ஆசிரியர்களை வைத்து பள்ளியை நடத்திவிடலாம். மேலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆசிரியர்களின் மனநிலையும் இந்த அதிரடியால்  மாறும் என்று யாரோ சிலர் பள்ளி கல்வித்துறைக்கு ஐடியா கொடுத்து இருக்கிறார்களாம்... அதை அப்படியே செய்து வருகிறார்களாம்... பல பள்ளிகளில் 11ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு ஆங்கில வழியில் பாடம் எடுக்க ஆட்கள் இல்லையாம்.  குறிப்பாக தமிழக அரசு புத்தகத்தை மாற்றிய பிறகு இந்த நிலையாம்... மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் எப்படி பாடம் நடத்துவது என்று திணறி வருகிறார்களாம். ஏற்கனவே உள்ள செலபஸ்சில் படிக்கும் ஆங்கில வழி மாணவர்கள்  தப்பித்தார்கள். புதிய பாடப்பிரிவுகளில் ஆங்கில வழி மாணவர்கள் ஏன் சேர்ந்தோம் என்று புலம்புகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பேச்சாளர்களே இல்லாத கட்சியை பார்த்தீர்களா... நீங்க போனா உங்களுக்கு கூட சான்ஸ் கிடைக்கும் போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘எனக்கு இருக்கிற வேலையில பேச்சாளர் ஆவதுதான் முக்கியம்... கிப்டின் அடிபொடிகள்தான் ரொம்ப கவலையாக இருக்காங்க... அதாவது பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்துட்டு வருது. அதுல பேச்சாளர்கள் மட்டுமில்லாது நன்றாக  பேசுபவர்களும் பங்கேற்கலாம். உங்கள் பேச்சு ரசிக்க முடியும் அளவுக்கு இருந்தால் நீங்கள் கிப்ட் கட்சியின் பேச்சாளராக தமிழகம் முழுவதும் வலம் வரலாம்னு சொல்லி இருக்காங்க... சின்ன பசங்கல எல்லாம் எங்களுக்கு நிகரா உட்கார வைத்து  பேச சொல்வதா என்று ஒரு குரலும்... எங்களுக்கே பணம் சரியாக தர மாட்டேன் என்கிறார்கள்.. இந்த நிலையில் கத்துகுட்டிகளை எல்லாம் பயன்படுத்துவதா என்று தற்போதுள்ள பேச்சாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளார்களாம். இன்னொரு  தரப்போ, கிப்ட் கட்சியில பேச்சாளர்களுக்கு பற்றாக்குறை... தொண்டர்களுக்கு பற்றாக்குறை. அதனால தான் இப்படி செய்றாங்கன்னு்  கிப்ட்டின் அடிபொடிகள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘ஒரு டாஸ்மாக் ‘பார்'' ஏலம் எடுத்தா ஒரு பங்களாவை கட்டிடலாம்னு ஒரு பேச்சு ஓடுதே உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழகம் முழுவதும் நேற்று நடக்க இருந்த டாஸ்மாக் ‘பார்’ டெண்டர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த டெண்டர் வரும் செப்டம்பர் 11ம்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ‘பார்’ மூலம் இலை கட்சிக்கு பல கோடி  ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதை இழக்க, இலை தரப்பு தயாராக இல்லை. அத்துடன், இலையை தவிர, பிற கட்சியினரை உள்ளே விடவும் தயாராக இல்லை. அதனால்தான் டெண்டர் விவகாரம் தள்ளிப்போயிருக்கு. கோவையில 300 டாஸ்மாக் ‘பார்'கள் இருக்கு. இந்த ‘பார்’களை டெண்டர் எடுக்க இலை தரப்புக்குள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது. இலை தரப்பு மேலிடம் உத்தரவு என்னவென்றால், 300 ‘பார்' டெண்டரிலும் உள்ளூர் இலை தரப்பு தவிர வேறு  எந்த கட்சியினரும் நுழையக்கூடாது. இந்த உத்தரவை கோவை இலை தரப்பு திறம்பட பின்பற்றி வருகின்றனர். டெண்டர் ஒத்திவைப்பு ஒருபக்கம் இருந்தாலும், இன்னொருபக்கம் ஒவ்வொரு ‘பார்'க்கும் தலா 3 விண்ணப்பம் மட்டுமே அதிகாரிகள்  வழங்குகின்றனர். அந்த 3 விண்ணப்பமும் இலை தரப்புக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. இதர கட்சியினர் யார் கேட்டாலும் விண்ணப்பம் கிடைப்பது இல்லையாம். இந்த விண்ணப்பங்களை பூர்த்திசெய்து சமர்ப்பித்த உடன், 3ல் ஒருவருக்கு  மட்டுமே ‘பார்' உரிமம் வழங்கப்படும்.

அந்த நபர், உள்ளூர் இலை கட்சி எம்எல்ஏ.வின் சிபாரிசு கடிதம் பெற்ற நபராக இருக்கவேண்டும். பல இலை கட்சி எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு ‘பார்' டெண்டர் வழங்குவதில் தீவிரம் காட்டி  வருகின்றனர். ‘பார்' டெண்டர் எடுக்க துடிக்கும் இலை கட்சியினர் எம்எல்ஏ வீடுகளை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், இலை கட்சி எம்எல்ஏக்களுடன், டாஸ்மாக் அதிகாரிகள் கைகோர்த்து செயல்படுகின்றனர். அதாவது, டெண்டர் எடுக்கும் நபர்கள், ஒரு ‘பார்'க்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு வழங்கிவிட  வேண்டும். இது, எழுதப்படாத ஒப்பந்தம். இந்த வலுவான கூட்டணி காரணமாக, இலை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் இடையே பல கோடி ரூபாய் புரள்கிறது. இப்படி போனால் ஒன்றுக்கு இரண்டு பங்களா கட்டலாம் போங்க...’’ என்று  வேதனையுடன் சொல்லி முடித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்