SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு பொருள் பாக்கெட்களில் இனி காலாவதி தேதி, தள்ளுபடி விவரம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்

2019-08-14@ 00:29:20

புதுடெல்லி: பாக்கெட் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி, தங்களது உணவு பொருள் பாக்கெட்களின் கவர்களில் காலாவதி தேதி / எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் ஆகிய விவரங்களுடன் எவ்வளவு  நாட்களுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லது போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் சாப்பிட்டால் நல்லது என்று குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின்னர் விற்கப்பட்டால் எவ்வளவு தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது  என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும் உணவு பொருள் சில்லறை விற்பனையை ஒழுங்குபடுத்தவும், தரமாந உணவுப் பொருள்களை விற்பனையை உறுதி செய்யவும் மேற்கண்ட நடவடிக்கைள் எடுக்க, இந்திய. உணவு பாதுகாப்பு மற்றும் தர  நிர்ணய ஆணையத்தின் பரிசீலனை செய்து வருகிறது.இது குறித்து அதிகார வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளவும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பு பயன்படுத்தினால் நல்லது என்ற தேதிக்கு பின்னர் விற்கப்படும்  பொருட்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் பேரம் பேசி வாங்குவதற்கு வசதியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உணவுப் பொருள்கள் வீணாவதை தடுக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் பயன்படுத்தினால் நல்லது என்று குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் விற்கப்படும் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க சில்லறை விற்பனையாளர்கள் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்து விற்கத்தான் முயற்சி  செய்கின்றனர். இந்த சூழ்நிலையில், நுகர்வோர் தாங்கள் என்ன வாங்குகிறோம் அதனை எவ்வளவு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பன போன்ற விவரங்களை அறியும் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் பேரம் பேசி  அந்த பொருளை வாங்கலாம். இதற்கான வாய்ப்புகளை நுகர்வோருக்கு அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தற்போது இந்தியாவில், குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற விவவம் பிரட், பாக்கெட்களில் விற்கப்படும் பால் பொருட்கள் உள்பட சில உணவுப் பொருட்களில்தான் குறிப்பிடப்படுகின்றன. உலகில், பாக்கெட் உணவுப் பொருள்  விற்பனை சந்தையில் முன்நணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல் ஆசியாவில் 2வது இடம்பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பாக்கெட் உணவுப் பொருள் விற்பனை ஆண்டுதோறும் 7 சதவீதம் அதிகரிக்கும் என்றும்  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

* உணவுப் பொருள் பாக்கெட்களை, அதன் பயன்பாட்டு காலத்திற்கு முன்பு விற்பனை செய்ய சில்லறை விற்பனையாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு விற்கின்றனர்.
* இந்த சூழ்நிலையில், நுகர்வோருக்கு கண்டிப்பாக சில தகவல்கள் தெரிய வேண்டும். அதாவது, “நாம் என்ன மாதிரியான பொருளை வாங்குகிறோம், எவ்வளவு நாட்களுக்கு இதை வைத்திருந்து சாப்பிடலாம்” என்பதை தெரிந்து கொள்ள  வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam 9 fest

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.

  • 10-12-2019

    10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hongkiong_1211

    அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • northesat_masothaa1

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

  • dragon_shapes_chinaa1

    40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்