SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காட்டாற்று வெள்ளத்தில் மாயமான குழந்தை சடலமாக மீட்பு

2019-08-14@ 00:29:16

பொள்ளாச்சி: காட்டாற்று வெள்ளத் தில்  அடித்துச் சென்ற குழந்தை  சடலமாக மீட்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த  சர்க்கார்பதியில், கடந்த 8ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக நாகரூத்து பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்த  குடிசைகள் அடித்து செல்லப்பட்டது. இதில் குஞ்சப்பன்  என்பவரின் 2 வயது பெண் குழந்தை சுந்தரி   தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய அவரது மனைவி அழகம்மாள்,  மகன் கிருஷ்ணன், மகள் ஜெயா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பெண்களை வனத்துறையினர் மீட்டனர். குழந்தை சுந்தரி, 5  நாட்களுக்கு பின் நேற்று மாலை சர்க்கார்பதியிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள பீடர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்