SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அத்திவரதர் தரிசனத்தை 108 நாளாக நீட்டிக்க முறையீடு: சென்னை ஐகோர்ட்டில் மனு செய்ய அறிவுறுத்தல்

2019-08-14@ 00:28:37

மதுரை: காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தை 108 நாட்களாக நீட்டிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் முறையிடப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று காலை வழக்கம் போல வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது வக்கீல் திருச்சி ராஜகோபால் ஆஜராகி, ‘‘காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அத்  திவரதர் தரிசனம் 48 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்களால் சாமியை முழுமையாக தரிசிக்க முடியவில்லை. பலர் சாமி தரிசனம் செய்ய  முடியாத நிலை உள்ளது. எனவே, அத்திவரதர் தரிசனத்தை 108 நாட்களாக உயர்த்த வேண்டியது அவசியம். இதுகுறித்து ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எனது தரப்பில் இதுதொடர்பாக மனு செய்ய  அனுமதிக்க வேண்டும்’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘நீங்கள் குறிப்பிடும் விவகாரம் சென்னை ஐகோர்ட்டின் எல்லைக்கு உட்பட்டது. எனவே, சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்