நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிப்பு தங்கம் விலை ரூ.29,000ஐ தாண்டியது : விரைவில் ரூ.30,000 எட்டுமா? நகை வாங்குவோர் அதிர்ச்சி
2019-08-14@ 00:13:06

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக நாள்தோறும் உயர்ந்து, சவரன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. இம்மாத இறுதிக்குள் சவரன் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை புதிய உச்சத்தை தொடர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த மே மாதம் முதல் உயர்ந்து வருகிறது. அதுவும் சிறிது, சிறிதாக தான் உயர்ந்து வந்தது. ஆனால் இதற்கு மாறாக, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.26,480, 2ம் தேதி ரூ.27,064, 3ம் தேதி ரூ.27,328, 5ம் தேதி ரூ.27,680, 6ம் தேதி ரூ.27,784, 7ம் தேதி ரூ.28,376, 8ம் தேதி ரூ.28,464, 9ம் தேதி ரூ.28,552, 10ம் தேதி ரூ.28,656க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. நேற்று முன்தினம் (12ம் தேதி) ஒரு கிராம் தங்கம் ரூ.3,603க்கும், சவரன் ரூ.28,824க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகப்படியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, கிராமுக்கு 24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,627க்கும், சவரன் ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் 29,016க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 13 நாட்களில் சவரனுக்கு 2536 அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வரும் மாதங்களில் திருமணம் உள்ளிட்ட விசஷே தினங்கள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிகரித்து வருவது திருமணம் உள்ளிட்டவற்றிற்கு நகை வாங்க பணம் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இம்மாத இறுதிக்குள் தங்கம் சவரன் ரூ.30,000ஐ தாண்டும் என்றும் அவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சீனா மற்றும் ஹாங்காங் நாடுகள் பெருமளவில் தங்கம் வாங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் இ.சி.ஜி. பேங்க் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறது. அதனால், உலக சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் விலை உயரத்தான் வாய்ப்புள்ளது. குறைவதற்கு வாய்ப்பில்லை. இம்மாதம் இறுதிக்குள் தங்கம் விலை ரூ.30,000ஐ தாண்ட வாய்ப்புள்ளது. தங்கம் விலை உயர்வால் நுகர்வோர் ஒரு அதிர்ச்சியான சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தங்கம் விலை உயர்வால் நகை கடைகளில் விற்பனை பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இப்படியே விட்டால் தங்கம் விலை இன்னும் உயர தான் செய்யும். இப்போதே வாங்கினால் இன்னும் விலை ஏற்றத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று மக்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். அதனால் விலையை பொருட்படுத்தாமல் நகையை வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
விதிமீறல் ஆட்டோக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் புகார்: நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் 20ம் தேதி முதல் செயல்படும்: 17 சாலைகளில் 5532 வாகனங்கள் நிறுத்தலாம்
உடைந்த பைப்லைனை சீரமைப்பதில் மெத்தனம் சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீர்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி: எம்டிசி மேலாண் இயக்குனர் தகவல்
விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அதிநவீன செயற்கை கால்: ராஜிவ்காந்தி மருத்துவமனை சாதனை
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது