பெண்கள் விடுதியில் செல்போன் கொள்ளை
2019-08-14@ 00:05:57

சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம் அருகே பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள செரின் திரேசா டோமினிக் (20) மற்றும் 2 தோழிகள் நேற்று முன்தினம் இரவு தங்கள் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக வைத்துவிட்டு தேவாலயத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் விடுதிக்கு வந்து பார்த்தபோது, 3 விலை உயர்ந்த செல்போன் கொள்ளை போனது தெரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த செரின் திரேசா டோமினிக் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தார். 3 பேருடைய செல்போன்களிலும் முக்கிய தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்கள் விடுதி அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியில் தங்கும் இளம்பெண்களின் செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடிக்கடி மாயமாகி வருவதாகவும், இரவு நேரத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் அங்கு தங்கியுள்ள பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் செய்திகள்
கவரிங் நகை கொடுத்து மோதிரம் வாங்கிய பெண் கைது
ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
துணிக்கடை அதிபர் வீட்டில் 1.8 லட்சம், நகை திருடிய வேலைக்கார பெண் கைது
மணலி, கொடுங்கையூரில் பெண்களிடம் செயின் பறிப்பு: மதுரை ஆசாமி கைது
போக்சோவில் வாலிபர் கைது
போலி பால் அட்டை தயாரித்து மோசடி கண்காணிப்பாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை: மதுரை ஆவினில் பரபரப்பு
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது