வேதையில் உப்பு உற்பத்தி 6 லட்சம் டன் எட்டும்: உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
2019-08-13@ 19:56:54

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டு இலக்கான 6லட்சம் டன் உற்பத்தியை எட்டும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஜனவரியில் தொடங்கிய உப்பு உற்பத்தி கடும் வெயிலின் காரணமாக அதிகளவில் நடைபெற்று வந்தது. ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்து, பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த 5 செ.மீ மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது உப்பள பாத்திகளில் தங்கியிருந்த மழைநீர் வடிந்ததால் கடந்த 10 நாட்களுக்கு பிறகு உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கி தீவிரமாக நடைபெறுகிறது. தற்போது 50ஆயிரம் டன் உப்பு இருப்பு உள்ள நிலையில், மீண்டும் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளதால் மழை காலத்துக்குள் ஆண்டு இலக்கான 6 லட்சம் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்களின் இணைய செயலாளர் செந்தில் கூறியதாவது: வேதாரண்யத்தில் தற்போது அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய பகுதிகளின் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் உற்பத்தி நடைபெறும். இதில் அகஸ்தியன்பள்ளியில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3300 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்து வந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது மழைநீர் வடிந்துள்ளதால் மீண்டும் பணியை துவங்கி உள்ளோம் என்றார்.
மேலும் செய்திகள்
ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைக்க கலெக்டர் ஆய்வு
வாணியம்பாடியில் பல்வேறு பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் மணல் கொள்ளை படுஜோர்
விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் ரேசன் கடையில் பலநாள் இருப்பு அரிசி விநியோகம்
நத்தம் கரந்தமலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை
திண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு பேருந்து
வேலூர் மாநகராட்சிக்கு சமீபத்தில் வாங்கப்பட்டது மாடுகள் கொண்டு செல்லும் லாரியின் ஹைட்ராலிக் இயந்திரம் பழுது
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது