SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 18 ஆண்டுகளில் நான் கொண்டாடிய முதல் விடுமுறை...ManvsWild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

2019-08-13@ 19:43:59

டெல்லி: 18 ஆண்டுகளில் தற்போது தான் விடுப்பு எடுப்பதாக, ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சியில் மனிதனும் காடும் (மேன் வெர்சஸ் வைல்டு)  என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. சுமார் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அடர்ந்த காடுகளில், வனவிலங்குகளை அதன்  இருப்பிடத்திற்கே சென்று பின்தொடரும் இந்த நிகழ்ச்சியானது அனைவராலும் மிகவும் விரும்பி  பார்க்கப்படும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ். அடர்ந்த காடுகளில் தன்னந்தனியே பயணம் செய்வது, மலைகளில் ஏறுவது,  நீரோடைகளை கடப்பது என பியர் கிரில்ஸின் பல்வேறு சாகச பயணங்கள் இதில் ஒளிபரப்பப்படும்.

இதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சி சுற்றுச்சூழல் மாறுபாட்டை வெளிச்சம்போட்டு காட்டும் முக்கிய நிகழ்ச்சியாகும். டிஸ்கவரி தொலைகாட்சியின் இந்த தொடரில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் சாகச  பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சி நேற்று இரவு 9 மணிக்கு டிஸ்கவரி தொலைகாட்சி ஒளிபரப்பானது. இந்த சாகச பயணத்தின் போது, பிரதமர் மோடியின் குழந்தைப் பருவம் முதல் அரசியல் பதவிகள் வரையில் பல கேள்விகளை  பியர் க்ரில்ஸ் கேட்டார். இதற்கு அமைதியாக பதிலளித்த பிரதமர் மோடி, மக்களுக்காகப் பணியாற்றி அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது என்பதுதான் எனக்கு மகிழ்ச்சியான செயல் என்றார். நாட்டின் வளர்ச்சியின் மீதே கவனம் உள்ளது.  பதவி என்ற எண்ணத்தை எப்போதும் என் தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மோடியின் பயம் குறித்த க்ரில்ஸின் கேள்விக்கு, “என்னுடைய பிரச்னை என்னவென்றால் இதுவரையில் நான் பயம் என்ற ஒன்றை அனுபவிக்கவில்லை. எப்போதும் பாஸிட்டிவ் ஆக இருப்பதால் பயம் என்னைத் தாக்கியதும் இல்லை  அனுபவித்ததும் இல்லை. இன்றைய இளைஞர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது. கீழே விழுந்தால் தளராதீர்கள். அங்கிருந்துதான் மேல் எழ முடியும் என நம்புங்கள். இந்த உலகை நான் ஒரே  குடும்பமாகவே பார்க்கிறேன். உங்களுடனான இந்தப் பயணம்தான் கடந்த 18 ஆண்டுகளில் நான் கொண்டாடிய முதல் விடுமுறை ஆகும்” என்றார்.

இடையே பியர் க்ரில்ஸ் புலிகள் நடமாட்டம் குறித்து மோடியை எச்சரித்தபோது, “நாம் எப்போதும் இயற்கையைக் கண்டு பயப்படவே கூடாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார். நாம் இயற்கையுடன் போரிட்டால் மட்டுமே இயற்கை  திருப்பித் தாக்கும்” என்றார். 13 ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்ததாகவும், நாட்டு மக்கள் தன்னை பிரதமராக்க முடிவு செய்ததால், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமராக பணியாற்றுவதாகவும், இளைஞர்கள் தங்கள்  வாழ்க்கையை தனித்தனியாக பிரித்து பார்ப்பதற்கு பதில், ஒட்டுமொத்தமாக பார்த்து, தாழ்வு நிலையில் இருந்து முன்னேறி வரவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்