பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயார்: டெல்லியில் தளபதி பிபின் ராவத் பேட்டி
2019-08-13@ 18:49:33

டெல்லி: காஷ்மீர் மக்களிடம், துப்பாக்கி இல்லாமல் உரையாடவே ராணுவம் விரும்புகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், அதேபோல் லடாக் பகுதியை பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ராணுவ தளபதி பிபின் ராவத், பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக தெரிவித்தார். முந்தைய காலங்களில், காஷ்மீர் மக்களுடன் ராணும் சுமூகமாக உரையாடியதாகவும், 70 மற்றும் 80-ம் ஆண்டுகளில் துப்பாக்கி இல்லாமல் மக்களைச் சந்தித்ததாகவும், வரும் காலங்களிலும் இது தொடரும் என்றும் தெரிவித்தார்.
மாநில முதன்மை செயலர் ரோதிக் கன்சால் கூறுகையில், காஷ்மீரில் முழு அமைதி நிலவுவதாக, அந்த காஷ்மீரில் அனைத்து சாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து துறையினரும் விழிப்போடு செயல்பட்டு வருவதாகவும் கூறினார். பக்ரீத் பண்டிகை, ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் அமைதியாக கொண்டாடப்பட்டதாகவும், சுதந்திர தினமும் உற்சாகமாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். இதனால், ஜம்முவில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும் ரோதிக் கன்சால் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை
திமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
கிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது
நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு
நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது