SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த குற்றத்தால் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2019-08-13@ 17:08:26

மதுரை: மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு புதுவித தண்டனையை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் 8 பேர் போதையில் வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 8 மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை. தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி 8 மாணவர்களும் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்த உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்