SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சவாலாகும் நீர்மேலாண்மை

2019-08-12@ 00:58:43

தெ ன்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தமிழகத்திலும் நீலகிரி மாவட்டத்தில் மழையின் பாதிப்புகள் அதிகம். வெள்ளம் திரண்டு வந்தால் முல்லை பெரியாறு அணையே உடைந்துவிடும் என அடிக்கடி அங்குள்ள பொதுமக்களையும், தமிழகத்தையும் கேரளா அச்சுறுத்தி கொண்டிருந்தது. காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட மாட்டோம் என பிடிவாதம் பிடித்த கர்நாடகா, இன்று ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இன்னும் 10 நாளில் மேட்டூர் அணையே நிரம்பிவிடும் நிலை உள்ளது.

கர்நாடகாவிலும், கேரளாவிலும் பாயும் வெள்ளத்தை ஒன்று கடலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் அல்லது தமிழகத்தின் ஆறுகளுக்கு தண்ணீர் தந்தே ஆகவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் இருந்து பாய்ந்து வரும் தண்ணீரை தமிழகம் எப்படி சேமிக்கப் போகிறது என்பதே நம் முன் நிற்கிற கேள்வி.கடந்த மாதம் வரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கூக்குரல் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலித்தது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழை, விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மழை இன்னமும் ஒரு வாரம் தொடர்ச்சியாக நீடித்தால் சில அணைகள் நிரம்பும் நிலை காணப்படுகிறது.

இவ்வாண்டு சென்னையின் வறட்சியை கண்டு உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் கண்ணீர் விட்டனர். சென்னையில் பல ஓட்டல்கள் மூடப்பட்டன. தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்பட்ட அவலமும் அரங்கேறியது. இச்சூழலில் தற்போது பெய்து வரும் மழையும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வெள்ளநீரும், தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இப்போதுதான் ஆட்சியாளர்கள் உருப்படியாக ஒரு வேலையை குடிமராமத்து என்ற பெயரில் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

அதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஒப்புக்கு அவர்கள் நியமனம் என்றில்லாமல், தமிழகத்திற்கு தற்போது கிடைத்துள்ள தண்ணீரை முடிந்தவரை சேமிக்க திட்டமிடுவது அவசியமாகும். வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து, ஆங்காங்கே நீர்நிலைகளில் அவற்றை தேக்க வேண்டும்.அணைகளில் இருக்கும் தண்ணீரை காரணமே இல்லாமல், 2 மாதங்களுக்குள் காலி செய்யாமல், தேவைக்கேற்ப திறந்துவிட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்று பெயரளவுக்கு பணிகள் கூடவே கூடாது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு இயற்கை இப்போது விடுத்துள்ள சவால் நீர் மேலாண்மை என்றே கருத வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்