SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டுக்கு செல்லும்போது இங்கே வேலையை காட்டி விடுவார்களோ என்ற பீதியில் சேலம்காரர் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-12@ 00:22:35

‘‘காஷ்மீர் விஷயத்துல உச்ச நடிகரு பேசியதை. ஹோம் ரசிச்சாராமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘உச்ச நடிகரின் பேச்சால் ஹோம் ரொம்ப மகிழ்ச்சியாம். இங்குள்ள எதிர்ப்பலைகளை அது குறைக்கும் என தாமரை நினைக்குதாம். ஆனால் தமிழகம் காஷ்மீர் பிரிப்பு விஷயத்தில் எதிர்ப்பாகவே இருக்கிறது என்ற விவரம் இன்னும் உச்ச  நடிகருக்கும் ஷாவுக்கும் தெரியாததை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று அவரது ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அப்டி என்னதான் ராத்திரியில சேலம்காரர் ஷாவிடம் தனியாக பேசினாராம்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில் உள்ள சிறு சிறு கட்சிகள் தான் காஷ்மீர் பிரச்னையை பெரிதாக்கி எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. மற்றபடி தமிழகம் முழுவதும் காஷ்மீர் விஷயத்தில் சப்போர்ட்டாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கும்  சிறப்பாக இருக்கிறது. எங்களுக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. எனவே நிதியமைச்சரிடம் சொல்லி எங்களுக்கான நிதியை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் தொழில் முனைவோர் மாநாட்டுக்காக நான் வெளிநாட்டுக்கு  செல்கிறேன். நான் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக மணியான அமைச்சர்களையும், நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளையும் விட்டு செல்கிறேன். நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என்று சில சக்திகள் ஆட்சியை கவிழ்க்க  முயற்சிக்கலாம். அப்படி ஒரு நிலை வந்தால் நீங்கள்தான் எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கூறினாராம். குறிப்பாக தேனிக்காரரை பற்றி சொன்னாராம். அதை ஷா பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்...’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘அப்புறம்...’’‘‘வேலூர் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஷா கோபப்படாத வகையில் சொன்னாராம். எங்கள் தரப்பு உயிரைக் கொடுத்து வேலை செய்தது. நாடாளுமன்றத்தில் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு மசோதாக்கள்  வேட்பாளரின் வெற்றியை பறித்துவிட்டது. வீட்டில் இருந்த நோயாளிகள், வயதானவர்கள் எல்லாம் வந்து கடைசி நேரத்தில் இலைக்கு எதிராக ஓட்டுபோட்டுவிட்டார்கள். இதனால்தான் குறைந்த அளவு ஓட்டு வித்தியாசத்தில் தோற்று  இருக்கிறோம். இலை கட்சி இன்னும் என் தலைமையில் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்றாராம். எல்லாவற்றையும் கேட்ட ஷா, எப்போது பொதுக்குழு, செயற்குழுைவ கூட்டப்போறீங்க என்று கேட்டாராம். விரைவில் என்று சொன்னாராம்  சேலம்காரர். அதை முடித்துவிட்டு என்னை டெல்லியில் வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டு அனுப்பி விட்டாராம். சேலம்காரர் தற்போதைக்கு குஷியோடு திரும்பினாலும் ஒரு வித பயத்துடனே வெளிநாட்டுக்கு பயணம் செல்கிறார். எனினும்  தன் தளபதிகளை தமிழகத்தில் விட்டுவிட்டு செல்வதால் ஆட்சிக்கும் தனக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவரது அடிப்பொடிகள் பேசிக்கொள்வது நன்றாகவே கேட்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெல்லை தன் பக்கம் இழுக்க கிப்ட் தரப்பு முயற்சிக்கிறதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சமீபத்தில் பதவியை பறிகொடுத்த அமைச்சர். விரக்தியின் உச்சியில் இருக்கிறாராம். அவரை வைத்து அந்த மாவட்டத்தை தன் கன்ட்ரோலில் கொண்டு வர கிப்ட் தரப்பு முயற்சிக்கிறதாம். அதற்கான நபர்களை நியமித்து பேச்சுவார்த்தை  தொடங்கி உள்ளதாம். ஆனால் மணியானவர் இன்னும் முடிவேதும் எடுக்காமல் திண்டாடி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பள்ளிகளை நூலகங்களாக மாற்றுவதில் உள்நோக்கம் இருக்கிறதா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தினாலும் அவர்கள் ஆட்சியர்களுக்கு விசுவாசமாக இல்லை என்ற தகவல் உளவுத்துறை மூலம் கிடைத்ததாம். அதுமட்டுமில்லாமல் அரசின் வருவாயில் பெரும்பகுதி ஆசிரியர்களின்  சம்பளத்துக்கே செல்வதாகவும் நிதித்துறை அறிக்கை அளித்துள்ளது. எனவே, பள்ளிகளை குறைத்தால் நிதி செலவு குறையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாம். அதனால் பள்ளிகளை மூடினால் அரசுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்னை  வெடிக்கும் என்பதால், கல்வித்துறையின் சில அதிகாரிகள் அளித்த அட்வைஸ்படி, தந்திரமாக பள்ளிகளை லைப்ரரியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாம். அதில் பணியாற்றுபவர்கள் அரசுக்கு எதிராக நினைக்க மாட்டார்கள். அரசின் செலவினமும்  நிறைய குறையும். எனவே, பள்ளிகளை லைப்ரரிகளாக மாற்றும் யோசனைக்கு சேலம்காரரும் அனுமதி அளித்தாராம். எனவே, வரும் தேர்தலில் இவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று ஆளுங்கட்சி நினைக்கிறதாம். இவர்களின்  முக்கிய நோக்கம் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதுதான்...’’ என்றார் விக்கியானந்தா.  

‘‘வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பெண் அமைச்சருக்கு சிக்கலாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘முத்தலாக், காஷ்மீர் விஷயங்கள் ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பை திசைதிருப்பும் பொறுப்பு பெண் அமைச்சருக்கு வழங்கப்பட்டதாம். அவரும் இது தொடர்பாக முக்கிய தலைவர்களிடம்  பேசுவதற்காக முயற்சித்தாராம். ஆனால் முக்கியஸ்தர்கள் எல்லோரும் பெண் அமைச்சரை சந்திக்க மறுத்துவிட்டார்களாம். தன் ஊரிலேயே செல்வாக்கு இல்லாத அமைச்சரை வைத்து இனி பலன் இல்லை... அவருக்கு பதில் வேறு ஒருவரை  அமைச்சராக்கினால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில் இந்த பதவி பறிப்பு ரொம்பவே முக்கியம் என்று தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாய் மூலமாக புகார்  அளித்துள்ளார்களாம். அமைச்சர் மாற்றப்படுவரா என்பது விரைவில் தெரியும்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-01-2020

  25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்