SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடுதிரை சிஸ்டம் இல்லாத குறையை போக்கியது மாருதி

2019-08-11@ 00:42:55

தற்போது விற்பனைக்கு வரும் பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சாதனம் என்பது இன்றியமையாத அம்சமாக மாறிவிட்டது. மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் கார் இயக்கம் பற்றிய தகவல்களை ஒருங்கிணைந்து தரும் இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம் தொடுதிரை வசதியுடன் வருவதால் இயக்குவதற்கும் எளிதாக இருக்கிறது. எனினும், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.இதனால், ஆரம்ப மற்றும் நடுத்தர வேரியண்ட்டுகளை வாங்குவோர் தொடுதிரை அல்லாத இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை மட்டுமே பெற முடிகிறது. சிலர், வெளியில் வாங்கி பொருத்துகின்றனர். ஆனால், அதில் வாரண்டி உள்ளிட்ட சில பிரச்னை எழுகிறது. இதை, மனதில் வைத்து தவிர்த்து விடுகின்றனர். இதுபோன்று தொடுதிரை இல்லாத இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படும் கார்களுக்காக சிறப்பு மொபைல் செயலியை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ‘’ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ டாக் ஆப்’’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த செயலியை மொபைல்போனில் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், காரில் இருக்கும் இன்போடெயின்மென்ட் டெக் யூனிட்டுடன் இதனை புளூடூத் அல்லது ஆக்ஸ் போர்ட் கேபிள் வழியாக இணைத்துக்கொள்ளலாம்.

மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் வசதிகள் மட்டுமின்றி, காரில் குறைந்த எரிபொருள் அளவு எச்சரிக்கை, மைலேஜ், சீட் பெல்ட் ரிமைன்டர், கதவுகள் திறந்திருப்பது குறித்த எச்சரிக்கை ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் டாக் ஆப்-ஐ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய செயலிகளை இந்த ஸ்மார்ட்போன் டாக் ஆப் சப்போர்ட் செய்யாது. தற்போது புதிய மாருதி வேகன்-ஆர் காருக்கு மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.வரும் மாதங்களில் மாருதியின் பிற மாடல்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை சப்போர்ட் செய்யும் வசதி அளிக்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் டாக் ஆப் பதிவிறக்கம் செய்த பின்னர், வாடிக்கையாளர்கள் தங்களது காரின், வின் நம்பரை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், இதனை தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போல் பயன்படுத்தும் வாய்ப்பை பெறலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்