SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுஸுகி புதிய பைக் தரமான ஸ்டைலில் அறிமுகம்

2019-08-11@ 00:42:42

சுஸுகி நிறுவனம், அதன் ஜிக்ஸெர் 250 எஸ்எப் மாடலின் மோட்டோஜிபி எடிசனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் ரேஸிங் நீல நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதே அம்சம்தான் 2019 சுஸுகி மோட்டோஜிபி மெஷின், ஜிஎஸ்எக்ஸ்-ஆர்ஆர் மாடலிலும் காட்சியளிக்கிறது. அந்தவகையில், எக்ஸ்டர் டீகேல் முதல் டிஸ்டின்க்டிவ் வீல் பின் ஸ்ட்ரைப்ஸ் உட்பட அனைத்தும் ரேஸிங் தலைமுறைக்கு ஈடான தரத்தில் ஜிக்ஸெர் எஸ்எப் 250 மோட்டோஜிபி எடிசன் மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பைக்கின் அறிமுகம் குறித்து சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணை தலைவர் தேவாஷிஸ் ஹாண்டா கூறுகையில், “சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் 250 மாடலின் வெற்றியை பின்தொடர்ந்து, அதில் மோட்டோ ஜிபி எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுஸுகியின் ரேசிங் ப்ளூ நிறம், நிறுவனத்தின் பந்தய திறனையும், ஸ்பிரிட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. ஸ்போர்ட்டியான சமகால தோற்றம் மற்றும் உயர்திறன் கொண்ட இன்ஜின் உள்ளிட்டவை இந்த பைக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஜிக்ஸெர் வரிசையில் விற்பனையாகி கொண்டிருக்கும் மற்ற மாடலைப்போலவே, இதுவும் நல்ல வரவேற்பை பெறும்” என்றார்.

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் 250 மோட்டோ ஜிபி பைக்கில், அதன் ஸ்டாண்டர்டு மாடலில் இருக்கும் அதே 250 சிசி திறன் கொண்ட இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 38.5 கிமீ மைலேஜ் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான மைலேஜ் திறனை வழங்க, பியூவல் இன்ஜெக்டட் சிஸ்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட எஸ்ஓசிஎஸ் திறன் கொண்ட இன்ஜின், மற்றும்  கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், ஸ்பிளிட் இருக்கை, ஸ்போர்ட்டி ஸ்டான்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.சிறப்பான ரைடிங் அனுபவத்திற்காக 17 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இது, முன்பக்கத்தில் 110/70 என்ற அளவிலும், பின்பக்கத்தில் 150/60 என்ற அளவிலும் உள்ளது. இதன் பியூவல் டேங்க் கொள்ளளவு 12 லிட்டராக உள்ளது. அதேபோன்று, பாதுகாப்பு வசதிக்காக முன் மற்றும் பின்பக்க வீல்களுக்கு பைபர் டிஸ்க் பிரேக் உள்ளன. இத்துடன், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் மோட்டோஜிபி எடிசன் ஜிக்ஸெர் எஸ்எப் 250 ₹1.71 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதே விலையைதான் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஜிக்ஸெர் எஸ்எப் 250 பெற்றிருக்கிறது.முன்னதாக, சுஸுகி நிறுவனம் இதேபோன்று, ஜிக்ஸெர் எஸ்எப் 150 மாடலின் மோட்டோஜிபி எடிசனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு இந்திய மதிப்பில் ₹1,10,605 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த பைக்கும், தற்போது அறிமுகமாகியுள்ள ஜிக்ஸெர் எஸ்எப் 250 மோட்டோஜிபி மாடலைப்போல் நீல நிற பெயிண்டிங் ஸ்கீமில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2019

  15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்