SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீரமானவரை டம்மி பதவிக்கு மாற்றுவதற்கு சேலம்காரர் ஆலோசிப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-08-11@ 00:14:44

‘‘வேலூர் தேர்தல் முடிவை இலை கட்சி எப்படி பார்க்கிறது...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை தலைவர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் தோல்வி.. தோல்விதான். ஆனால் சேலம், தேனி விவிஐபிக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். காரணம் தாமரை விவிஐபியை எப்படி சந்தித்து சமாதானம் சொல்வது என்று  அதிர்ந்து போய் உள்ளனர். இதற்காக ஒட்டுமொத்த வெயிலூர் மாவட்டத்தையே கட்சியின் உட்கட்டமைப்பு வகையில் நாசப்படுத்தி உள்ள வீரமானவரை தூக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளூர் கட்சிக்காரர்களிடம் இருந்து எழுந்துள்ளது.  அவர் சிறைப்பறவையின் ஆளா... கூட இருந்தே குழிபறிக்கிறாரா என்ற சந்தேகம் சேலம்காரருக்கு எழுந்துள்ளது. வீரமானவருக்கு பாடம் புகட்டவே பல இலை கட்சியினரும் சேர்ந்து எதிராக வாக்களித்து ஏசியை ேதாற்கடித்தனர். இனி தன்னை  மாவட்டத்தில் பலம் பொருந்திய அமைச்சராக பந்தா காட்ட முடியாது. ஒன்று பவர் இல்லாத துறைக்கு மாற்றப்படலாம் அல்லது அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்படலாம். இரண்டு அமைச்சர்கள்... சேலம்காரருக்கு நெருக்கமான கிழக்கு  மாவட்ட செயலாளர்கள் என்று பலரும் சும்மா சுற்றி வந்து அதிகாரம் ெசய்ததோடு சரி. மற்றபடி பெரிய அளவில் அவர்கள் களப்பணியாற்றவில்லை..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அது என்ன கணக்கு...’’ என்றார் பீட்டர் மாமா‘‘தாமரை சின்னத்தில் கடந்த 2014ம் ஆண்டு தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் ேபாட்டியிட்ட ஏசிஎஸ் 3 லட்சத்து 24 ஆயிரத்து 326 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அப்போது இலை கட்சி தனித்து  போட்டியிட்டு 3 லட்சத்து 83 ஆயிரத்து 719 வாக்குகள் பிடித்தது. இப்போது பாமக, தேமுதிக, இலை கட்சி, தாமரை ஆகியவை இணைந்து போட்டியிடும்போது சுமார் 7 லட்சம் வாக்குகள் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் இலை கூட்டணி  இருந்தும் அவர் கூடுதலாக வாங்கியது சுமார் 46 ஆயிரம் ஓட்டுகள்தான்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூத்துக்குடி பெயரை கேட்டாலே கோபம், துக்கம்தான் முதல்ல ஞாபகத்துக்கு வருது...’’ உங்களுக்கு  என்றார் பீட்டர் மாமா. ‘தூத்துக்குடி கமிஷனர் துணிச்சலான முடிவு எடுத்துள்ளாராம். வாகன காப்பகங்களை ஒரு திரைமறைவு குரூப் தான் ஏலத்தில் எடுத்து நடத்தி வந்தது. இந்த வாகன காப்பகங்களை நடத்த போட்டி ஏற்பட்ட போதெல்லாம் சால்ஜாப்பு எதுவும்  எடுபட முடியாமல் போனது. அந்த அளவுக்கு அந்த குரூப் அசைக்க முடியாத இடத்தில் இருந்தது. இதனால் மாநகராட்சி கமிஷனர்களும் அடக்கி வாசித்தனர். ஆனால் குத்தகைதாரர்களின் பெயரில் நடந்த வாகன கட்டண வசூல் குறித்து  பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன. ஆனால் நடவடிக்கை என்பது புஸ்ஸ்... இந்நிலையில் தற்போதைய மாநகராட்சி கமிஷனர் நூதன நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அவர் இரண்டு வாகன காப்பகங்களையும்  மாநகராட்சியின் பிடிக்கு கொண்டு வந்துள்ளார். அது மட்டுமல்லாது இனி மாநகராட்சியே வாகன காப்பகங்களை நடத்தும் என கூறி இத்தனை ஆண்டுகளாக கோலோச்சி வந்த சிண்டிகேட் ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதை  கேள்விப்பட்ட பொதுமக்கள் இனி காப்பக பிரச்னை இருக்காது...’’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திருச்சியில கஞ்சா விற்பனை சூடுபிடித்து இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘திருச்சி ரகுமானியபுரம், காந்திநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் கஞ்சா தங்கு தடையின்றி கிடைத்து வந்ததாம். போலீஸ் கெடுபிடியால் சமீபத்தில் இந்த பகுதிகளில் இருந்து வெளியேறிய கஞ்சா மொத்த வியாபாரிகள், நகரின் பல பகுதிகளில்  ஆங்காங்கு கிளையை திறந்து வைத்துள்ளனர். இந்த கிளையில் கஞ்சா மட்டுமின்றி ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களும் இவர்களிடம் 24 மணி நேரமும் கிடைக்குதாம்... சில்லறை வியாபாரத்துக்கு ஏஜெண்டுகளும்  நியமிக்கப்பட்டுள்ளார்களாம்.. பெரும்பாலும் பெண்களும், இளைஞர்களுமே சில்லறை விற்பனையில் ஈடுபடுகின்றனர். இவர்களின் குறி இளம் பெண்கள், மாணவிகள்தான்.  போதை பழக்கத்துக்கு அடிமையான மாணவ, மாணவிகள் வார இறுதி  நாட்களில் கல்லுாரி வளாகத்திலும், வெளிப்பகுதிகளிலும் மயங்கி கிடப்பதை காணமுடிகிறது என ரோந்து போலீசார் வேதனையுடன் சொல்கின்றனர். இதுதவிர வார இறுதிநாள் பார்ட்டி என்று ஜாலியாக உள்ளனர்.

இந்த பார்ட்டிகளில் பீர், உயர்ரக வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி கஞ்சா, ஹெராயின், பிரவுன் சுகர் வரை கிடைக்கும் என்று கல்லுாரி ஊழியர்கள் கிசுகிசுக்கின்றனர்.  ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசோ... மாமூலை  வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்து வருகின்றனர். இந்த விஷயங்களை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய உளவுத்துறையினருக்கும் பணத்தில் பங்கு போவதால், அவர்களும் முக்கிய தகவல்களை வடிகட்டியே தேவையில்லாத தகவல்களை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி,  அவர்களை திசை திருப்புகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்