நிலவுக்கு விண்கலம் அனுப்பிய இஸ்ரேல்!
2019-08-07@ 14:35:38

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி
இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரியும் என்ஜிஓ ஸ்பேஸ்ஐஎல்-ம் சேர்ந்துதான் இந்த ஆளில்லா விண்கலத்தை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் கேப் கானவெரலிலிருந்து கடந்த பிப்ரவரி 22 ம் தேதி அனுப்பியது. பெரிஷீட் என்னும் பெயருடைய 585 கிலோ எடை கொண்ட, இந்த விண்கலம் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் நிலாவிற்கு அனுப்பப்பட்டது. பூமியை பின்னணியில் வைத்து பெரிஷீட் விண்கலம் செல்ஃபி எடுத்து அந்த செல்ஃபியை 37,600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்ரேலிய மிஷன் கண்ட்ரோலுக்கு அனுப்பியுள்ளது.
இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே நிலாவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியுள்ளனர். பைபிள், குழந்தைகளின் ஓவியம், இஸ்ரேல் பாடல்கள் மற்றும் இஸ்ரேலிய கொடியை டிஜிட்டல் வடிவத்தில் இந்த விண்கலம் கொண்டு சென்றுள்ளது. இஸ்ரேலைத் தொடர்ந்து இந்தியாவும் சந்திராயன் -2வை நிலாவுக்கு அனுப்பியுள்ளது. 2020-2021 காலக்கட்டத்தில் ஸ்லிம் என்னும் சிறிய லூனார் லாண்டரை ஜப்பான், நிலாவுக்கு அனுப்ப உள்ளது. மற்ற நாடுகளை மிஞ்சும் வகையில் நாசா ஒரு திட்டம் வைத்துள்ளது. கேட்வே என்னும் சிறிய விண் தளத்தை நிலாவின் ஆர்பிட்டில் 2026ம் ஆண்டுக்குள் உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2030ம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதனை அனுப்பும் திட்டம் தீட்டியுள்ளது நாசா.
மேலும் செய்திகள்
நடக்கும் மீன்
அதிசயமான பிளாட்டிபஸ் : ஒரு விஷமுள்ள பாலூட்டி
‘அல்பினோ’ பெங்குயின்
அறிவியல் ஆச்சர்யம்
23 வருடங்களுக்குப் பிறகு தென் தமிழகத்தில் டிச. 26-ம் தேதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது
மனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்