எடை குறைவான ஸ்மார்ட்போன்
2019-08-07@ 14:30:37

நன்றி குங்குமம் முத்தாரம்
ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ‘ரெட்மி கே20 ப்ரோ’ வெளியாகிவிட்டது. ரொம்ப நாட்களாகவே ஒரு நிறைவான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப் போவதாக ‘ஷியோமி’ நிறுவனம் சொல்லிக்கொண்டிருந்தது. அதை இப்போது அதிரடியாக நிறைவேற்றிருக்கிறது. ஆம்; ‘முழுமையான ஸ்மார்ட்போன்’ என்ற அடைமொழியுடன் தான் வெளியாகியிருக்கிறது ‘ரெட்மி கே20 ப்ரோ’. ஆன்லைன் வணிக தளங்களில் இந்தப் போன் கிடைக்கிறது.
பார்த்தவுடனே நம்மை கவர்ந்திழுக்கும் AMOLED டிஸ்பிளே, அதுவும் 6.39 இன்ச்சில். ஐபோனில் இருப்பது போன்று கைரேகையின் மூலமாக போனை லாக் இன் செய்யும் வசதி, போனின் வேகமான செயல்பாட்டுக்கு 8 ஜிபி ரேம், உங்களுக்குப் பிடித்த பாடல்கள், புகைப்படங்கள், சினிமாக்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள 256 ஜிபியில் ஸ்டோரேஜ், வேண்டுமானால் ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளும் வசதி, 48 எம்பியில் பிரைமரி சென்சாருடன் கூடிய கேமரா, அகண்ட நிலக் காட்சிகளைப் பதிவாக்க 13 எம்பியில் வைடு ஆங்கிள் கேமரா, தூரத்தில் இருப்பதைப் படம் பிடிக்க 8 எம்பியில் டெலிபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா என வரிசையாக மூன்று பின்புற கேமராக்கள்.
தவிர, 20 எம்பியில் பாப்- அப் வசதியுடன் செல்ஃபி கேமரா, 4k தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்லோ மோஷன் வீடியோ ரெக்கார்டிங், விரைவிலேயே முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய 4,000mAh திறன், 191 கிராம் எடை, மெலிதான வடிவமைப்பு என அசத்துகிறது இந்த போன். இந்தியாவில் இதன் விலை ரூ.27,999
மேலும் செய்திகள்
ரூ. 41,999 விலையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி !!
இந்தியாவில் அறிமுகமாகியது ஹுவாய் வாட்ச் GT 2
இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட்5 அறிமுகம்
ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நோக்கியா!
மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
நீண்ட நேர பேட்டரி திறன் கொண்ட புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்: இந்தியாவில் அறிமுகம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்