SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளோபல் போன்

2019-08-06@ 15:22:07

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ‘விவோ’. நிறுவனம் தொடங்கிய பத்து வருடங்களிலேயே சுமார் 100 நாடுகளில் தனது வியா பாரத்தை விரிவாக்கியுள்ளது. பொதுவாக பெரு நிறுவனங்கள் தனது தயாரிப்புகளை வளர்ந்த நாடுகளுக்கு என்று தனியாகவும், வளரும் நாடுகளுக்கு என்று தனியாகவும் உற்பத்தி செய்யும். இதனால் தரத்திலும் விலை யிலும் பெரிய வித்தியாசம் இருக்கும்.

‘விவோ’ நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியர்களுக்கு ஒரு வகையிலும், அதாவது மலிவான விலையில் அதற்கு ஏற்ற தரத்திலும், ஐரோப் பியர்களுக்கு இன்னொரு வகையிலும் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வந்தது ‘விவோ’. ஆனால், இப்போது ‘எஸ் 1’ என்ற புதிய மாடலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் களமிறக்கப்போகிறது. உலகம் முழுவதும் இதன் தரமும் விலையும் ஒன்றுதான் என்பது இதில் ஹைலைட்.

அதனால் இதை ‘குளோபல் போன்’ என்று அழைக்கின்றனர். இந்தப் புது மாடலில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.6.38 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டியுடன் சூப்பர் ‘AMOLED’ மெகா டிஸ்பிளே, 1080 x 2340 பிக்ஸலில் ஸ்க்ரீன் ரெசல்யூசன், 16 எம்பியில் பிரைமரி கேமரா, 8 எம்பியில் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பியில் டெப்த் சென்சார் பொருத்தப்பட்ட கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், 32 எம்பியில் செல்ஃபி கேமரா, ஃபிங்கர் பிரின்ட் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி, 4500mAh திறன்கொண்ட பேட்டரி, மெலிதான வடி வமைப்பு என அசத்துகிறது ‘எஸ் 1’. விலை ரூ.17,000- ரூ.20,000. இந்த போன் ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும், விவோ ஷோரூம்களிலும் கிடைக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2019

    11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jnu_studentss1

    குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

  • bushfire_aussiee1

    ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

  • asutra_bushfirr1

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

  • parani_deepam11

    கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்