SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பா.ஜ.வுக்கு வாக்களிக்காதவர்களையும் கவரும் வகையில் பணியாற்றுங்கள்: எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

2019-08-05@ 05:15:59

புதுடெல்லி: ‘‘பாஜ.வுக்கு வாக்களிக்காதவர்களும், உங்களை நெருங்கும் வகையில் பணியாற்ற வேண்டும்’’ என பாஜ எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். பாஜ எம்.பி.க்களுக்கு ‘அப்யாஸ் வர்கா’ என்ற பெயரில் 2 நாள் பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிறைவடைந்தது. இதில் 380க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘கட்சி தொண்டர்கள் தாயை போன்றவர்கள். அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. தேர்தலில் உங்களின் வெற்றிக்காக உழைத்த அவர்களை மறக்காமல், அவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டும்’’ என அறிவுரை கூறினார்.

இந்நிலையில் நேற்று நடந்த பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘‘எல்லோருடைய நலனுக்காக நீங்கள் பணியாற்ற வேண்டும். பா.ஜ.வுக்கு வாக்களிக்காதவர்கள் பற்றி எதிர்மறையான எண்ணத்தை தவிர்க்க வேண்டும். அவர்களும் உங்களை நெருங்கும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில், உங்கள் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு உங்களது செயல்பாடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்