SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போட்டியாளர்களுக்கு கிலி தரும் கியா

2019-08-04@ 00:40:33

இந்தியாவின் எம்பிவி (மல்டி பர்பஸ் வெகிக்கிள்) ரக மார்க்கெட்டை டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா ஆண்டு வருகிறது. இதற்கு இணையான அம்சங்கள் கொண்ட நேரடி போட்டி மாடல் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில்,  டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவைவிட பிரிமீயமான எம்பிவி ரக கார் மாடலை கியா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ‘‘கியா கார்னிவல்’’ என்ற பெயரில் வர இருக்கும் இப்புதிய எம்பிவி கார், இந்தியர்களிடம் அதிக ஆவலை  ஏற்படுத்தி உள்ளது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரைவிட அதிக இடவசதி மற்றும் பிரிமீயம் அம்சங்களுடன் இந்த கார் வர இருப்பதால், நாளுக்கு நாள் இந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம், முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி ரக காரை கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டாவது மாடலாக கியா கார்னிவல் எதிர்பார்க்கப்படுகிறது. கார்னிவல் எம்பிவி காரை அடுத்த  ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருக்கும் கார்னிவல் எம்பிவி ரக கார், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய கியா மோட்டார் நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் கியா கார்னிவல் எம்பிவி ரக கார், 7 சீட்டர், 9 சீட்டர் மற்றும் 11 சீட்டர் என்ற மூன்று விதமான இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 7 சீட்டர் மாடலில் மட்டுமே அறிமுகம்  செய்யப்பட உள்ளது.இதன் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய ஆலையில் அசெம்பிள் செய்து, விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய கியா கார்னிவல் காரில், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள்,  இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் தனித்தனியான கேப்டன் இருக்கை, இன்போடெயின்மென்ட் சிஸ்டம், சிறப்பான ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற இருக்கின்றன. இந்த காரில் பல்முனை பாதுகாப்புக்காக அதிக ஏர்பேக்குகள்,  இபிடியுடன்கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.இந்த கியா கார்னிவல் காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புதிய கியா கார்னிவல் கார் ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gujarath_111

  குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

 • srilankaa_twinnss1

  இலங்கையில் உலக சாதனை நிகழ்ச்சியாக அதிக இரட்டையர்கள் ஒன்று கூடிய மாபெரும் நிகழ்வின் மெய்சிலிர்ப்பூட்டும் படங்கள்

 • iyesu_kudaamuu1

  இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

 • nirmalaa_alawaa1

  டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

 • telanagana_leopardd1

  தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்