SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாடாவின் எச்2எக்ஸ் மினி கார்

2019-08-04@ 00:39:51

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் எச்2எக்ஸ் என்ற பெயரிலான மினி எஸ்யூவி ரக கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியிருந்தது. அப்போதே, இந்த எஸ்யூவி ரக கார், பார்வையாளர்களின்  கவனத்தை வெகுவாக கவர்ந்தது. கச்சிதமாகவும், கம்பீரமாகவும் இதன் தயாரிப்பு நிலை மாடல் இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. இப்புதிய கான்செப்ட் காரின் தயாரிப்பு நிலை மாடலானது ஹார்ன்பில் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட  இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டாடா ஹார்ன்பில் எஸ்யூவி ரக கார் அறிமுகத்தை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அல்ட்ராஸ் என்ற பெயரில் வரும் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார், பஸ்ஸார்டு என்ற பெயரில் வரும் ஹாரியர்  எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல்களின் அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஹார்ன்பில் எஸ்யூவி ரக காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது டாடா நிறுவனம்.

இந்நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் இப்புதிய மினி எஸ்யூவி ரக  கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹாரியர் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் புதிய ஹார்ன்பில் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஹாரியர் போன்ற முகப்பு டிசைன், புதிய ஹார்ன்பில் எஸ்யூவியில் இடம்பெற இருக்கிறது.வசீகரமான பம்பர் அமைப்பு, அரை சதுர வடிவிலான வீல் ஆர்ச், பாடி கிளாடிங் சட்டம் என இந்த காரின் டிசைன், வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும். இந்த கார் 2.5 மீட்டர் வீல் பேஸ் பெற்றிருக்கும். 1.8 மீட்டர் அகலம்,  1.6 மீட்டர் உயரத்துடன் வடிவமைக்கப்படுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இப்புதிய கார், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  நடக்க இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என டாடா அறிவித்துள்ளது. விலை விவரம் வெளியிடப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்