SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள ரகசிய முடிவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-07-24@ 00:14:30

‘‘ஆகஸ்ட் மாசம் என்ன விசேஷம்... ெதாழிற்சங்கங்கள் ரகசியமாக கூடி பேசிட்டு வர்றாங்களாம்.. எதுக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் மின்வாரியம், போக்குவரத்து கழகம், அங்கன்வாடி மையம், டாஸ்மாக், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்பட பல்வேறு துறையினர் தமிழக மானியக்கோரிக்கைக்கு முன்பாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது அழைத்து பேசிய அமைச்சர்கள், அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிவித்துள்ளதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது. மானியக்கோரிக்கையின்போது பார்த்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தையின்போது தேன் ஒழுக பேசினர். அது உண்மை என்பதால் தொழிற்சங்கங்கள் கூட்டம் போட்டு தங்கள் உறுப்பினர்களிடம் நல்ல நேரத்திலேயே ஆளுங்கட்சி எதுவும் செய்யாது... இப்போது நாடாளுமன்ற தேர்தல் அறிவித்துவிட்டதால் ேதர்தல் கமிஷன் எதுவும் செய்யவும் விடாது என்று பேசி சாந்தப்படுத்தினர். அவர்களும் சங்க நிர்வாகிகளின் கருத்தை ஏற்று அவரவர் வேலைக்கு சென்று வந்தனர்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அப்புறம் என்னாச்சு...’’
தேர்தல் முடிந்து மானியக்கோரிக்கை விவாத தேதி அறிவிச்ச பிறகும் சங்க தலைவர்கள் அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசினர். அவர்களும் மானியக்கோரிக்கை வரை பொறுத்திருங்கள் என்று கூறி அனுப்பினர். ஆனால் மானியக்கோரிக்கை எல்லாம் முடிந்து வேலூர் தேர்தல் பணிக்கு எல்லோரும் சென்றுவிட்டனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கை எதுவும் நிறைவேறவில்லை. இதனால் டென்ஷனான சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகளை ேபாட்டு வறுத்தெடுத்துவிட்டனர். தீபாவளி சமயத்தில் நாம் என்ன செய்தாலும் கோர்ட்டில் வழக்கு போட வைத்து நம் வேலை நிறுத்தத்தை தடுத்துவிடுவார்கள். எனவே, ஆகஸ்ட் மாதத்தில் பெரிய அளவில் எந்த பண்டிகையும் இல்லை. ஒன்று நாம் கேட்பதை அரசு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பணி புறக்கணிப்பு, கோட்டை முற்றுகை, பஸ்களை இயக்குவது இல்லை. ஒத்துழையாமை நடத்துவது... அரசின் சிறப்பு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் நிறுத்துவது... சாலை மறியல் செய்வது என்று ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் விரைவில் கூட உள்ளனர். அவர்கள் தனித்தனியாக நடத்தலாமா தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெரிய அளவில் நடத்தலாமா. இதற்கு அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆதரவை கேட்போம் என்று முடிவு செய்துள்ளார்களாம். ஆகஸ்ட் ஆளுங்கட்சி மறக்க முடியாத மாதமாக இருக்கும் என்று தொழிற்சங்கத்தினர் ரகசியமாக பேசிவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதை உளவுத்துறையும் மோப்பம் பிடித்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேலூர் தேர்தல் சூடுபிடித்துவிட்டதா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் ஓட்டு சேகரிப்பதில் தீவிரமாக இறங்கி உள்ளனர். ஒரே எம்பி தேர்தலுக்கு 10க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினரை ஏன் அழைக்க வேண்டும் என்ற சந்தேகம் அந்த உள்ளூர் மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளதாம். அதற்குள் இலை தரப்பு கரன்சியை பதுக்கிவிட்டதாகவும் தேர்தலுக்கு ஒருவாரத்துக்கு முன்பாக பட்டுவாடா நடக்கும் என்றும்... யாரும் எம்பி தொகுதியில் உள்ள பகுதியில் தங்காமல் பக்கத்து தொகுதியில் ரூம் போடச் சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இரண்டு தலைமுறை சீரழிஞ்சதா சொல்கிறார்களே.. அது எந்த தலைமுறை...’’ என்று கவலையுடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘முதன்முறையாக பிளஸ் 1 பொதுத் தேர்வை அறிவிச்சாங்களே... அந்த பேட்ச்சில் தேர்வு எழுதியவர்கள் அதற்கு பிறகு புலம்பினர். ஒன்றுமே புரியல. சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கும் புரியல என்று நடுத்தர மற்றும் சாதாரண மாணவர்கள் 70 சதவீதத்துக்கும் மேல் பிளஸ்1ல் தங்கள் ஒரு தலைமுறையை இழந்தார்கள். அதில் நீட் சிறப்பு பயிற்சி என்று அறிவித்துவிட்டு பத்து நாள் கூட நீட் பயிற்சி வகுப்பு நடக்கல. பயிற்சி அளிக்க வந்த ஆசிரியர்களுக்கு ப்ரொஜக்டர் மூலம் விளக்க தெரியாததால் மாணவர்களுக்கு சரிவர பயிற்சி அளிக்க முடியவில்லை. மேலும் நீட் பயிற்சி நாளில் பள்ளி ஆசிரியர்கள் நீங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டாம். பள்ளிக்கு வாருங்கள் என்று கூறி அனுப்பவில்லையாம். இதனால் நீட் தேர்வை நம்பிய அந்த தலைமுறை தற்போது அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நீட் ரிப்பீட்டர்ஸ் கோர்சில் சேர்ந்து இருக்கிறார்களாம். இப்போது சிஏ சிறப்பு பயிற்சி என்று அறிவித்துள்ளார்கள். இதனால் பல பள்ளிகளில் அக்கவுண்டன்சி, காமர்ஸ், எகனாமிக்ஸ் கொண்ட மூன்றாம் பிரிவை கொண்டு வந்துள்ளார்களாம். இதுவரை அப்பிரிவு மாணவர்களுக்கு புத்தகங்கள் என்று தமிழ், ஆங்கிலம் உள்பட சில புத்தகங்கள் மட்டுமே வழங்கி உள்ளனர். முக்கிய பாடப்புத்தகங்கள் வரவில்லை. அப்பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பது மாணவர்கள், பெற்றோர்களின் பரவலான குற்றச்சாட்டு. ஏண்டா இந்த வகுப்பில் சேர்ந்தாய் என்று மாணவர்களின் பெற்றோர் கேட்க... அதை பள்ளியில் வந்து கேளு என்று மாணவர்கள் சொல்ல தற்போது பல இடங்களில் பெற்றோர்-ஆசிரியர்களுக்கு இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இவர்களும் எங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கை போய்விடும் போலிருக்கிறதே என்று புலம்பி வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விளையாட்டில் ஆர்வம் உள்ள கலெக்டர் பற்றி சொல்லுங்களேன்... ’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி நிர்வாகம் சார்பில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடந்தது. இந்த போட்டிகளில் வருவாய்துறை, கூட்டுறவு, ஊரக வளர்ச்சி உட்பட 14 அரசு துறைகள் மட்டும் கலந்துகொண்டன. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய கலெக்டர், பிற அரசு துறைகள் ஏன் கலந்துகொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பியதுடன் அனைத்து துறை அலுவலர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கண்டிப்பாக பங்கேற்கும் வகையில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்கு இடையே மீண்டும் ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்றும், நிலை வாரியாக போட்டி நடத்தப்படுவதுடன் இதில் அனைத்து துறைகளின் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம். கலெக்டரின் விளையாட்டு ஆர்வம் ஊழியர்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்