SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

2019-07-23@ 14:33:25

சென்னை: தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. தபால் துறையில் உள்ள பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூலை 14ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வில் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. இதனை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்நதார். இதனிடையே, மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருங்காலங்களில் தபால் துறை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தபால் துறை சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படும் என கூறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.

அப்போது ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல், அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தேர்வு தொடர்பான அறிவிப்பாணைகளும் நிர்வாக காரணங்களால் திரும்பப் பெறப்பட்டது. தேர்வை எப்படி நடத்துவது? என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது என்று கூறிய அவர், அது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2019

    17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-11-2019

    16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jet15

    1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

  • amgun

    அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

  • zimbabwe_elephant111

    ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்