SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து செல்போன்களை திருடிய சிறுவனுக்கு வலை

2019-07-23@ 01:38:43

சென்னை: வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி செல்போன்கள் திருடுபோனது. இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு சிறுவன் வீடுகளில் நுழைந்து செல்போன்களை நைசாக திருடி செல்வது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, சம்மந்தப்பட்ட சிறுவனை தேடி வருகின்றனர்.

* காசிமேடு இந்திரா நகரை சேர்ந்த செல்வமணி (56) உட்பட 4 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குள் மீன்பிடிக்க படகில் சென்றனர். சுமார் 7 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென செல்வமணி சுருண்டு விழுந்து இறந்தார்.
* மண்ணடி மூக்கர் நல்லமுத்து தெரு பகுதியில் கஞ்சா, மதுபானம் விற்ற மண்ணடி டேவிட்சன் தெருவை சேர்ந்த அஜித் (25), மூக்கர் நல்லமுத்து தெருவை சேர்ந்த கமலா (60), சதாம் (27), மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 50 மதுபாட்டில்கள், ₹5500 ரொக்கம், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
* எழும்பூர் ரயில்வே குடியிருப்பை சேர்ந்த மணிவண்ணன் (48) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ₹2 ஆயிரம், 3 லேப்டாப்கள் ஆகியவற்றை மர்ம நபர்களை திருடிச் சென்றனர்.
* புளியந்தோப்பு கோவிந்தாபுரத்தை சேர்ந்த புருஷோத்தம்மன் (45) என்பவரை தாக்கி பணம் பறித்த வழக்கில் ஓட்டேரி மனோ (25), கார்த்திக் (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.
* தரமணி எம்ஜிஆர் நகர் கலைஞர் தெருவை சேர்ந்த பாபு (35), அதே பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர், ஆடி மாத திருவிழாவுக்கு நன்கொடை தரவில்லை என்பதால் சரமாரி தாக்கிய, தந்தை பெரியார் நகர், முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (19), கருணாநிதி தெருவை சேர்ந்த மகேஷ்குமார் (19), எம்ஜிஆர் நகர் ஜிந்தா தெருவை சேர்ந்த மற்றொரு விக்னேஷ் (19), சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்த ராஜேஷ் (19), ராஜாஜி தெருவை சேர்ந்த கார்த்திக் (19), கலைஞர் தெருவை சேர்ந்த ஆதிமூலம் (60) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
* சைதாப்பேட்டை ரெட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த முகமது சுல்தான் என்பவர், வேலை சம்மந்தமாக பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை சென்றபோது, அங்கு கஞ்சா போதையில் இருந்த கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராபர்ட் மற்றும் பூங்கா நகர் எஸ்.எம்.நகரை சேர்ந்த தீனா ஆகிய இருவர், முகமது சுல்தானை சினிமா பாணியில் சாலையில் ஓட விட்டு துரத்தி சென்று சரமாரியாக தாக்கினர். புகாரின் பேரில் பூக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து, ராபர்ட், தீனா ஆகிய இருவரை கைது செய்தனர்.
* விருதுநகர் மாவட்டம் ஆர்.கே.நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (45). சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் படப்பிடிப்பு ஊழியாராக வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதியை ேசர்ந்த துணை இயக்குநர் மாரீஸ்வரன் என்பவருடன் ேநற்று காலை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது, நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். பெருமாள் ஹெல்மெட் அணியாததால் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மாரிஸ்வரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்