SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழல் அரசியல்வாதிகளை சுட்டுக்கொள்ளுங்கள்... காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

2019-07-22@ 17:01:05

டெல்லி : ஊழல் அரசியல்வாதிகளை சுட்டுக்கொள்ளுங்கள் என தீவிரவாதிகளை காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கேட்டுக்கொண்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கார்கிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசிய சத்யபால் மாலிக்  சொந்த மக்களையே தீவிரவாதிகள் சுட்டுக்கொள்வது கொடுமையானது என்று கூறினார். சிறப்பு காவல்படை அதிகாரிகள் மற்றும் காவலர்களை குறிவைத்து சுட்டுக்கொள்ளும் தீவிரவாதிகள் மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகளை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காஷ்மீர் ஆளுநரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரை ஆட்சி புரிந்த குடும்பத்தினர் டெல்லி, துபாய், லண்டன் என பல இடங்களில் சொந்த வீடுகள் வைத்துள்ளதை ஆளுநர்  சத்யபால் மாலிக் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் உமர் அப்துல்லா, அரசியல்வாதிகள், அதிகாரிகள் கொல்லப்பட்டால் அதற்கு ஆளுநரின் கருத்தே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் தனது பேச்சுக்கு  சத்யபால் மாலிக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் :

காஷ்மீர் ஆளுநரின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. ஊழல் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் பேசியிருக்க வேண்டும். அரசியல்வாதிகளை கொள்ளுங்கள் என ஆளுநர் பேசியது தவறு என்று கூறினார்.மேலும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளுங்கள் என மக்களை தூண்டிவிடும் செயல் ஆகும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மஜீத் மேமன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்