SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் சந்திப்பு

2019-07-22@ 14:39:12

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று இரவு டெல்லி வந்தடைந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் இன்று காலை சுமார் 12 மணியளவில் நாடாளுமன்ற வளாகம் வந்தடைந்தார். இதையடுத்து அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை சந்தித்தார். மேலும் அந்த சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயபிரகாஷ் நட்டாவும் உடனிருந்தார். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற வளாகத்திலேயே இருக்கும் ஓபிஎஸ் அங்கு வேறு சில அமைச்சர்களையும் சந்திப்பார் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும் இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்திற்கு அவர் வந்த போது அதிமுக - வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை வரவேற்று சந்தித்தனர்.

பின்னர் அவர் அமித்ஷாவின் அலுவலகத்திற்கு சென்று அமித்ஷாவை சந்தித்தார். மேலும் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகும் அமித்ஷாவே பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தொடர்கிறார். இதையடுத்து அப்படியிருக்கும் சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷாவுடன் தமிழக துணை முதல்வரான ஓ. பன்னிர் செல்வம் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். அதன் பிறகும் இரண்டு கட்சிகளுக்கிடையேயான உறவு தொடர்கிறது என்பதை இந்த சந்திப்பு குறிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongfight26

    போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்