SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் தூர்வாரப்படாத கண்மாய்: ரூ. 1.20 கோடி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக விவசாயிகள் புகார்

2019-07-22@ 14:14:01

மதுரை: மதுரையில் கண்மாய் தூர்வாருதல் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல் ஆகியவற்றிக்கு என சுமார் 1கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் செய்ய டெண்டர் விடப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து தற்போது இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனுர் கண்மாய் பாசனத்தை ஆதாரமாக கொண்டு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன. மேலும் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கண்மாயில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது. ஆனால் கண்மாய்கள் முறையாக தூர்வாரப்படாமலும் மற்றும் சீமைக்கருவேல முட்கள் அகற்றப்படாமல் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

 இதை தொடர்ந்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் செப்பனிடப்படவில்லை என்றும் விரிசலாக உள்ள கால்வாயை சீரமைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதை தொடர்ந்து  புதிதாக கட்டப்பட்ட மதகு பகுதியில் கை வைத்தலே பேயர்த்தெடுக்கும் அளவிற்கு தரமற்றதாக இருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தூர்வாரும் பணிகளை முடித்துவிட்டு தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam 9 fest

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.

  • 10-12-2019

    10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hongkiong_1211

    அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • northesat_masothaa1

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

  • dragon_shapes_chinaa1

    40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்