SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமயம், அரிமளம் பகுதியில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு: வீடுகளில் புகுந்து விடுவதால் மக்கள் அச்சம்

2019-07-22@ 13:14:41

திருமயம்: திருமயம், அரிமளம் பகுதியில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் வறட்சியால் காட்டு வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி குடியிறுப்பு பகுதிக்குள் இறை, குடிநீர் தேடி படையெடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக குரங்கு, மயில் உள்ளிட்டவைகள் குடியிறுப்புவாசிகள், விவசாயிகளுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இருந்த போதிலும் குரங்கு, மயில் உருவங்கள இந்து கடவுளாக வணங்கி வருவதால் இதனை பொதுமக்கள் காயப்படுத்தாமல் விரட்டி வருகின்றனர்.அதே சமயம் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை சேதப்படுத்தும் மயில்களை ஒரு சிலர் விஷம் வைத்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அரிமளம், திருமயம் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதனிடையே குரங்குகள் ஒருபடி மேலே போய் விளைநிலங்கள் மட்டுமல்லாது குடியிறுப்புகளுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்து வீட்டு தோட்டம் உள்ளிட்டவைகளை காழி செய்து வருகின்றன. இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள குடியிறுப்புவாசிகள் வீட்டருகே வளர்த்த மா, பாலா, வாழை,கொய்யா, தென்னை உள்ளிட்டவைகளில் இருந்து எந்த ஒரு பலனும் அடைய முடியவில்லை. இந்நிலையில் குரங்குகளுக்கு பயந்து பெரும்பாலான குடியிறுப்புவாசிகள் வீட்டு தோட்டம் பராமரிப்பதே விட்டுவிட்டனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், திருமயம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்களை பிடிக்க முடியவில்லையென்றாலும் குடியிறுப்பு, வயல்பகுதியை விட்டு விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதுபற்றி அரிமளம் பகுதி மக்களிடம் கேட்ட போது:அரிமளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வயல் விவசாயம் மட்டுமன்றி வீட்ருகே தோட்டம் வைத்து அதில் விளையும் காய்கறிகள், பழங்களை அரிமளம், கே.புதுப்பட்டி, ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட பகுதியில் நடைபெறும் சந்தைகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை முற்றிலும் பொய்த்துபோன நிலையில் வயல்களில் ஒரு சிலர் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். இதேபோல் காட்டு பகுதிகளுக்குள்ளும் வறட்சி நிலவிவுவதால் காட்டிற்குள் சுற்றி திரிந்த குரங்குகள், மயில்கள் ஊருக்குள் புகுந்து விலை நிலங்களை வீணாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாய்கள் வளர்த்தாலும் குரங்குகள் ஒன்று சேர்ந்து நாய்களை தாக்குவதால் நாயை கண்டு குரங்கு பயந்த காலம் போய் குரங்குகளை கண்டு நாய் ஓடுகிறது. அதே சமயம் குரங்குகள் நம்முடைய முதாதையர் என்பதால் அதனை அடித்து விரட்ட கூட மனம் வருவதில்லை.

இதனிடையே ஒரு சிலர் சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து வந்து அரிமளம் வனப்பகுதிக்குள் விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அரிமளம் பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மேலும் கூறை,ஓடு வீடுகளுக்குள் ஓடுகளை பிரித்து கொண்டு திருடன் போல் வீட்டுக்குள் குரங்குகள் இரங்கி வீட்டிலுள்ள பொருட்களை வேட்டையாடி வருகிறது.இதுபொதுமக்களுக்கு கடும் வேதனை அளித்து வருகிறது. மேலும் மருத்துவமனை, பள்ளி வளாகம், கடை வீதி பகுதிக்குள் குரங்குகள் துழைந்து நோயாளிகள், பள்ளி மாணவர்கள்,பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பல முறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதன் விளைவாகவே கடந்த சில ஆண்டுகளாக மான்கள் குடியிறுப்பு பகுதிக்குள் நுழைவதும் நாய்களுக்கு இறையாவதும் வாடிக்கையாகி வருகிறது. காடுகள் அழிப்பதை பாதுகாக்க அதிகாரிகள் இருக்கும்போது வன விலங்குளை பாதுகாக்க அதிகாரிகள் இல்லையா என கேள்வி எழுப்பினர்.மருத்துவமனை, பள்ளி வளாகம், கடை வீதி பகுதிக்குள் குரங்குகள் துழைந்து நோயாளிகள், பள்ளி மாணவர்கள்,பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறது. இது குறித்து கலெக்டரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்