SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருப்புக்கோட்டையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராத பொழுதுபோக்கு பூங்காக்கள்

2019-07-22@ 13:14:40

* தண்ணீரின்றி காயும் பூச்செடிகள்
* அரைகுறையாக கிடக்கும் பணிகள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில், பொழுதுபோக்கு பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அருப்புக்கோட்டை நகராட்சியில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக அஜீஸ்நகர், வசந்தம் நகர், ரயில்வே பீடர் ரோடு பகுதிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.இதுதவிர திருச்சுழி ரோடு கணேஷ் நகர், சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோடு ஆகிய பகுதிகளில், பூங்கா அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தலா 20 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காம்பவுண்ட் சுவர், பேவர் பிளாக்கற்கள் பதித்தல், போர்வெல் அமைத்தல், அழகிய வண்ணச்செடிகள், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் செய்ய வேண்டிய நிலையில், நிதி போதுமானதாக இல்லை என கூறி, பணிகள் அறைகுறையாக கிடக்கின்றன.திருச்சுழி ரோடு கணேஷ் நகர் பூங்காவில், மின்வாரிய உயர் மின்னழுத்த டவர் இருப்பதால், பூங்காவிற்கு மின்வாரியம் மின்இணைப்பு வழங்கவில்லை. இதனால், போர்வெல் அமைத்து, தண்ணீர் எடுக்க முடியாமல் உள்ளது. இதனால், பூங்காவில் உள்ள செடிகள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொம்மைகள் அமைக்கப்படவில்லை. சுற்றுச்சுவர் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடப்பதற்கு பேவர் பிளாக் பாதைகளோ, அழகிய வண்ணச்செடிகளோ அமைக்கப்படவில்லை.

இதேபோல, சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோட்டில் உள்ள பூங்காவும் முழுமையாக அமைக்கப்படவில்லை. ஆங்கில வகை செடிகளும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பேவர் பிளாக்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் விளையாட உபகரணங்கள் இல்லை. கடுமையான வெயிலால், இங்குள்ள பூச்செடிகள் கருகிவிட்டன. பூங்காவில் உள்ள செடிகளுக்கு மருந்து தெளிக்கப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே, பூங்காப் பணிகளை முழுமையாக நிறைவேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.நகரில் அஜீஸ்நகர் பூங்காவை தவிர மற்ற பூங்காக்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோடு பூங்காவையும், திருச்சுழி ரோடு கணேஷ்நகர் பூங்காவையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் உள்ள 5 பூங்காக்களுக்கும் நகராட்சி பணியாளர்களை அமர்த்தி பராமரிக்க வேண்டும். எனவே, நகராட்சி நிர்வாகம் பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்